பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


19. 20. 21. 22. 23. 24. 25. 25 புவியின் அமைப்பு இயல்புகள் இயற்கை ஆற்றல்களால் ஏற்படுபவை. இவை ஒரே சீராகவும் மெதுவாகவும் நீண்ட காலங்கள் நடைபெறுபவை. முறையான புவி அமைப்பியல் எப்பொழுது உருவாயிற்று? 18 ஆம் நூற்றாண்டில். தட்டு அமைப்பியல் கொள்கையை நன்கு விளக்கியவர் ιμπή ? டேன் மெக்கன்சி, கேம்பிரிட்ஸ் பல்கலைக் கழகம். நிக்கோலிஸ் அம்ரேசி தம் குழுவினருடன் செய்த அரும் பணி யாது? கி.மு. 10 முதல் 1699 வரை ஏற்பட்ட 3000 நில நடுக்கங்களை அடையாளங் கண்டறிந்தனர். இவற்றில் 2200 பெரும் நில நடுக்கங்கள். குவியர் கொள்கை யாது? அதன் விளைவு யாது? இவர் கொள்கை மாமாற்றக் கொள்கை. இது வெர்னர் கொள்கையையும், ஹட்டன் கொள்கையையும் பின்னுக்குத் தள்ளியது. இவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். இவர் ஆற்றல் வாய்ந்த அறிவியலார். புவி அமைப்பியலின் இரு பெரும் பிரிவுகள் யாவை? 1. இயற்கைப் புவி அமைப்பியல். 2. வரலாற்றுப் புவி அமைப்பியல். இயற்கைப் புவி அமைப்பியல் என்றால் என்ன? புவியின் இயல்பான அமைப்பை ஆராய்வது. இதில் அடங்கும் பிரிவுகள் யாவை? 1. கனிம இயல் - தாதுப் பொருள்களை ஆராய்வது. 2. பாறை இயல் - பாறைகளை ஆராய்வது. 3. தட்டு அமைப்பியல் - புவி உண்டானதை வரலாற்று முறையில் ஆராய்வது. 4. புவி உருவியல் நிலத் தோற்றங்களை ஆராய்வது. 5. பொருளியல் புவி அமைப்பியல் - புவி அமைப்பு முறைகள், பொருள்கள் ஆகியவற்றை ஆராய்வது. 6. நிலநடுக்கவியல் - நில அதிர்ச்சிகளை ஆராய்வது. 7. எரிமலை இயல் - எரிமலைகளை ஆராய்வது.