பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 4. புவி அமைப்பியல் ஊழிகள் புவி அமைப்பியல் ஊழிகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? 1. முன்கேம்பிரியன் ஊழி 2. தொல்லுழி 3. நடு ஊழி 4. அண்மைக்கால ஊழி முன்கேம்பிரியன் ஊழியிலுள்ள பிரிவுகள் யாவை? 1. உயிரிலாக் காலம் - 3000 மில்லியன் ஆண்டுகள். புவி தோன்றுதல். உயிர் தோன்றவில்லை. 2. தொல்லுயிர் காலம் - 2000 மில்லியன் ஆண்டுகள். ஒரு கண்ணறையுள்ள அமீபா, கிளமிடோமோனாஸ் முதலிய விலங்குகளும், தாவர இனங்களும் தோன்றல். 3. முதல் உயிர் ஊழி - 1200 மில்லியன் ஆண்டுகள். முதுகு எலும்பற்ற விலங்குகள் தோன்றுதல். தொல்படிவங்கள் சில பாதுகாக்கப்படுதல். தொல்லுழியிலுள்ள பிரிவுகள் யாவை? 1. கேம்பிரியன் - 550 மில்லியன் ஆண்டுகள். முதுகெலும்பற்ற கடல் உயிர்கள் தோன்றுதல். 2. ஆர்டோவிசியன் - 480 மில்லியன் ஆண்டுகள். பவழங்கள், கடற்பஞ்சுகள் முதலிய முதுகெலும்பற்ற விலங்குகள் தோன்றுதல். தொல்கால மீன்கள் தோன்றல். 3. சைலூரியன் - 435 மில்லியன் ஆண்டுகள். பவழங்கள் மலைத் தொடர்களை அமைத்தல். நில முதுகெலும் புள்ள விலங்குகள் தோன்றுதல். மீன் வகைகளும் பெருகுதல். 4. டிவோனியன் - 405 மில்லியன் ஆண்டுகள். முதுகெலும்புள்ள விலங்குகள் தோன்றுதல். மீன்கள் நிரம்ப இருத்தல். தவளை முதலிய இரு நிலை வாழ்விகளும் பூச்சிகளும் தோன்றுதல். 5. கரியடக்கக் காலம் - 300 மில்லியன் ஆண்டுகள். தவளை முதலிய நிலம்நீர் வாழ்வுன, பூச்சிகள் தோன் றுதல். சுறா மீன்கள் தோன்றுதல்.