பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 6. பர்மியன் - 260 மில்லியன் ஆண்டுகள். சுறாக்கள் நிலைத்திருத்தல். பூச்சிகள் நிரம்ப இருத்தல். ஊர்வன பெருகுதல். நடு ஊழியிலுள்ள பிரிவுகள் யாவை? 1. மூவூழி. 225 மில்லியன் ஆண்டுகள். கடல் முதுகெலும் பற்ற விலங்குகள் எண்ணிக்கையில் குறைதல். தினோசார் களும் நண்டின் உயிரிகளும் தோன்றுதல். 2. ஜிராசிக் (இயல்பு வாழ்காலம்). 180 மில்லியன் ஆண்டுகள். தினோசார்கள் அதிகமிருத்தல். தொல்காலப் பறவைகள் இக்கால நண்டின் உயிர்கள் பெருகுதல். 3. கிரேட்டேசியஸ் - 130 மில்லியன் ஆண்டுகள். தினோசார்கள் அற்றுப் போதல். தொடக்ககால பாலூட்டிகள் தோன்றுதல். அண்மைக்கால ஊழியின் பிரிவுகள் யாவை: 1. பாலியோசீன் - 65 மில்லியன் ஆண்டுகள. இக்கால முதுகெலும்பற்ற விலங்குகள் தோன்றுதல். தொடக்க காலப் பாலூட்டிகள் தோன்றுதல். 2. ஈயோசீன் - 55 மில்லியன் ஆண்டுகள். தொடக்க காலப் பாலூட்டிகள் தோன்றுதல். இவை இப்பொழுது இல்லை. மெல்லுடலிகளும் (நத்தை) குளம்புள்ள விலங்குகளும் தோன்றுதல். 3. ஆலிகோசீன் - 38 மில்லியன் ஆண்டுகள். பல பாலூட்டிகள் அற்றுப் போதல். குரங்குகள் முதலிய விலங்குகள் தோன்றுதல். 4. மைலோசீன் - 25 மில்லியன் ஆண்டுகள். பாலூட்டிகளும் நத்தைகளும் தற்காலப் பண்புகளைப் பெறுதல். திமிங்கிலங்களும் மனிதக் குரங்குகளும் தோன்றுதல். 5. பிளையோசீன் - 10 மில்லியன் ஆண்டுகள். பாலூட்டிகள் பெருகுதல். ஊன் உண்ணிகளும் தோன்றுதல். ஆப்பிரிக்காவில் முதல் குரங்கு மனிதன் தோன்றுதல். 6. பிளைஸ்டோசீன் - 2 மில்லியன் ஆண்டுகள். எல்லாப் பெரும் பிரிவு உயிரினங்களும் தோன்றுதல்.