24. 25. 26. 27. 28. 29. 50. 31. 55 2. கரிவயமாதல் 3. நீர் ஏற்றம் 4. கரைதல். உயிரியல் சிதைவுக்குக் காரணிகள் யாவை? தாவரம், விலங்கு, பாறை, மனிதன். இயற்கைத் தேய்வு என்றால் என்ன? நீர், காற்று, வெப்பம் முதலிய இயற்கை ஆற்றல்களால் பாறை சிதைந்து மண்ணாவதை இயற்கைத் தேய்வு என்கிறோம். இயற்கைத் தேய்வில் ஆற்றின் வேலைகள் யாவை? 1. பாறைகளைத் தேய்வுறச் செய்கின்றன. 2. பள்ளத்தாக்கை ஆழமாக்குகின்றன. இயற்கைத் தேய்வில் காற்றின் வேலைகள் யாவை? 1. மண் துகள்களை அடித்துச் செல்கின்றன. 2துகள்களும் பாறையும் தேய்வுறக் காற்றும் ஒரு காரணம். இயற்கைத் தேய்வில் பணியாறுகளின் பணிகள் யாவை? 1. பணியாறு நகரும்போது அதன் அடிப்பாகத்தில் புதைந்துள்ள பாறைத்துகள்கள் நகர்கின்ற தளத்தின் மீது உராய்கின்றன. 2. இதனால் பாறைத் துகள்களும் அவை உராயும் தளமும் தேய்வுறுகின்றன. இயற்கைத் தேய்வில் அலைகளின் வேலைகள் என்ன? 1. இவை பாறைகளில் மோதுகின்றபொழுது அவற்றின் விசைக்கேற்ப நீரில் காணப்படும் மண்துகள்கள் தாக்கப் படுகின்றன. 2. இப்பொழுது துகள்கள் தாமும் தேய்ந்து பாறையை யும் தேய்வடையச் செய்கின்றன. காற்று அரிப்பினால் உண்டாகும் நிலத்தோற்றங்கள் யாவை? 1. காளான் பாறை 2. பட்டைக்கற்கள் 3. தேன் கூட்டுச் சிதைவு காற்றுப் படிவித்தலால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/57
Appearance