பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48. 49. 50. 51. 52. 53, 54, 55. 56. 57. 94 இவை ஆர்டிக் பகுதியும், அண்டார்க்டிக் பகுதியும் ஆகும். ஆர்க்டிக் பகுதி எங்குள்ளது? ஆர்க்டிக் வட்டத்தினுள் அமைந்துள்ளது. இந்தக் கற்பனைக்கோடு வடமுனையைச் சுற்றியமைந்துள்ளது. அண்டார்க்டிக் பகுதி எங்குள்ளது? இது தென்முனையைச் சுற்றியுள்ள கண்டமாகும். வடமுனைக்குக் கீழ்ச் சென்ற கப்பல் எது? 1958இல் அமெரிக்கக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் நாட்டிலஸ் வடமுனைக்குக் கீழ்ப் பயணம் செய்தது. உலகின் எவ்வளவு பகுதி பனிக்கட்டியால் மூடியுள்ளது? புவிநிலப்பரப்பின் 1/10 பகுதிக்கு மேல் பனிக்கட்டி முடியுள்ளது.கிரீன்லாந்து பனிக்கட்டி 1,800,000 சதுரகிமீ அளவுக்குள்ளது. அண்டார்க்டிகாவில் பனிக்கட்டி 13,000,000 சதுர மீட்டர் அளவுக்குள்ளது. எவ்வளவு நீர் உலகில் பனிக்கட்டியில் உள்ளது? உலகின் நன்னீரில் 3/4 பகுதி பனிக்கட்டியில் உள்ளது. ஆர்க்டிக் பெருங்கடலில் கலக்கும் ஆறுகள் யாவை? ஒப், எனிசி, லேனா. இவை மைய ஆசிய மலைத் தொடரில் உருவாகி வடக்கு நோக்கிப் பாய்கின்றன. இந்தியப் பொருங்கடலில் கலக்கும் ஆறுகள் யாவை? ஆசியா கண்டத்தில் டைக்ரிஸ், யூப்ரடிஸ், சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி, சால்வீன், சிட்டகாங் முதலிய ஆறுகள் இக்கடலில் கலக்கின்ன. பசிபிக் பெருங்கடலில் கலக்கும் ஆறுகள் யாவை? ஆமுர், கோவாங்ஹோ, யாங்கட்சிகியாங். ஆர்க்டிக்கின் சுற்றுலாப் பகுதிகள் யாவை? ட்ராம் சோ, ஸ்பிட்ஸ்பர்கன், கிருமா. ஆர்க்டிக்கின் கனிவளம் எத்தகையது? உறைந்த ஆர்க்டிக் பகுதியில் 200 ஆண்டுகள் வரை கிடைக்கக் கூடிய நிலக்கரி உள்ளது. பெட்ரோலியமும் அதிக அளவுக்குத் தேங்கியுள்ளது. இங்குச் செம்பு, அலுமினியம், காரீயம், துத்தநாகம், டங்ஸ்டன், யுரேனியம், தங்கம் ஆகியவை பனிக்கட்டிக்குக் ககிழ்ப்