பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. 59. 60. 61. 62. 65. 64. 65. 95 புதைந்துள்ளன. வடமுனை ஒளி என்றால் என்ன? புவியின் வடகோளத்தில் தோன்றும் பல வண்ணங்கள் உள்ள ஒளி. வானவெளிக்கலத்திலிருந்து பார்க்க, இது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். முனை ஒளிகளில் ஒரு வகை. ஆர்க்டிக் பகுதிக்கு முதன்முதலில் சென்றவர் யார்? பெத்தியாஸ் என்னும் கிரேக்க ஆர்ாய்ச்சியாளர். இவர் கி.மு. 325இல் தம் பயணத்தை மேற்கொண்டு முதன் முதலில் உலகைச் சுற்றியவர். ஆர்க்டிக்கை ஆராய்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ιμπή? புரோபிஷர், ஜான் டேவிஸ், பேரண்ட்ஸ், குக், பேரி, கேன்டகேனி, கிரீலி, பியரி, வில்கிட்ஸ்கி, ராஸ்டுசன், பயர்டு, வில்கின்ஸ். ஆர்க்டிக் பெருங்கடலின் முக்கிய நீரோட்டங்கள் யாவை? ஆர்க்டிக் நீரோட்டம், கல்ப் நீரோட்டம், லாப்ரடார் நீரோட்டம். இந்தியப் பெருங்கடலை முதன்முதலில் ஆராய்ந்தவர் ιμπή? 1885 - 1887இல் எச்.எம்.ஐ இன்வெஸ்டிகேட்ட எனும் கப்பலில் அலாக் என்பார் இந்தியக் கடற்பகுதிகளைச் சுற்றிச் சென்றார். இந்தியக் கடலை உலக அளவில் ஆராயும் திட்டம் எப்பொழுது உருவாயிற்று? 1959இல் உருவாயிற்று. இந்தியப் பெருங்கடலின் முக்கிய நீரோட்டங்கள் யாவை? நடுக்கோட்டு நீரோட்டம் மொசம்பிகுய நீரோட்டம், அகுலாஸ் நீரோட்டம், பாரசீக நீரோட்டம். இந்தியப் பெருங்கடல் வழியாக முதல் பயணம் எப்பொழுது தொடங்கிற்று? 1874 - 1875இல் சேலன்ஜர் என்னும் கப்பலில் தொடங்கிற்று.