பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


76.ஒதுக்கப்பட்ட குழந்தைகள் யாவை?

இவற்றைப் பிற குழந்தைகள் வெறுக்கும். இவை அவற்றின் நட்பைப் பெற விரும்பும்.


77.காலுதற் விளையாட்டுக்க கொள்கை என்றால் என்ன?

குழந்தைகளின் உள்ளத்தில் முடங்கிக் கிடக்கும் உளவெழுச்சிகள் வெளிப்படக் காரணமாக இருப்பது விளையாட்டுக் கொள்கையே.


78.புறக்கணிப்புக் குழந்தைகள் யாவை?

பிற குழந்தைகள் இவற்றைப் புறக்கணிக்கும். இவை பிற குழந்தைகளை விரும்பும்.


79.பிற்பட்ட குழந்தை என்பது யாது?

பள்ளிப் பாடங்களில் அதிகம் பின்னேற்றமுள்ள குழந்தை.


80.மீத்திறக் குழந்தை என்றால் என்ன?

நுண்ணறிவு ஈவு 130 க்கு மேலுள்ள குழந்தை. இதற்குத் தனிப் பாடத் திட்டம் தேவை.


81.பாதுகாப்புணர்ச்சி என்றால் என்ன?

ஒர் இன்றியமையா உளத்தேவை. இது நீங்கின் தகைப்பாடு இல்லாமை தோன்றும். உளவியல் சிக்கல் ஏற்படும். குழந்தைக்கு இவ்வுணர்ச்சி கட்டாயம் தேவை.


82.உளச்சிக்கல் என்பது யாது?

இது ஒர் உளக்குறைபாடு, உளப்பகுப்பில் நனவிலித் தோற்றம் என்று குறிக்கப்படும் நனவாற்றலின் திசையையும் அமைப்பையும் இது உறுதி செய்வது.

83.இதன் வகைகள் யாவை?

தாழ்வுச் சிக்கல், உயர்வுச் சிக்கல், ஓடிபஸ் சிக்கல் எனப்


84 உளப்பண்டுவத்தின் முதன்மையான நோக்கம் யாது?

உளச்சிக்கலை நோயாளியின் நினைவிற்குக் கொண்டு வருவதே இதன் முதன்மையான நோக்கம்.

45.தாழ்வுச் சிக்கல் என்றால் என்ன?

தாழ்வு மனப்பான்மை. குழந்தையிடத்து ஏற்படும் தன்னைப் பற்றிய தாழ்வான எண்ணம். இது ஆட்லரின்