பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


21. தற்கலன் என்றால் என்ன?
இது ஒரு வலிமை வாய்ந்த கலன். இதில் மீவெப்பநீராவி, அழுத்தத்தில் சமைக்கவும் நோய் நுண்ணங்களை நீக்கவும் மருத்துவமனைகளில் பயன்படுதல்.

22. கேள்மானி என்றால் என்ன?
செவியுணர்வுகளை அளக்கும் கருவி.

23. கேள் ஒலிமானி என்றால் என்ன?
பற்களுக்கு எதிராக அழுத்த ஒலிகளை எலும்புகள் வழியாகச் செவிக்குத் தெரிவிக்கும் கருவி.

24. செயற்கைச் சிறுநீரகம் என்றால் என்ன?
குருதியினைத் தூய்மை செய்யச் சிறுநீரகத்தின் வேலையைச் செய்யுங் கருவி.

25. மூட்டுக்குழிநோக்கி என்றால் என்ன?
மூட்டுக் குழியின் முன் பகுதியைப் பார்க்கப் பயன்படும் கருவி.

26. நடக்க உதவும் கருவிகள் என்பவை யாவை?
நுண்மின்னணுக்கருவிகள். உறுப்புக் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவியாக இருப்பவை. குருடாக்கும் செவிடர்க்கும் இவை பெரிதும் உதவுபவை.

27. கேட்க உதவுங் கருவி என்றால் என்ன?
செவிடர்கள் கேட்பதற்குக் காதில் பொருத்திக் கொள்ளும் மின்னணுக் கருவி.

28. தொண்டை நோக்கி என்றால் என்ன?
தொண்டையை ஆராயப் பயன்படுங் கருவி.

29. மருத்துவ வெப்பநிலைமானி என்றால் என்ன?
மனித உடலின் வெப்பநிலையைப் பதிவு செய்யுங் கருவி.

30. மூக்குநோக்கி என்றால் என்ன?
மூக்கை ஆராயுந் துறை.

31. வயிற்றறை நோக்கியல் என்றால் என்ன?
இடுப்பு வளைய உறுப்புகளை உள்நோக்கி ஆய்ந்து பார்த்தல். இதைச் செய்யுங் கருவி வயிற்றறை உள் நோக்கி ஆகும்.