51
5. இதயக் குருதிக்குழாய்கள் யாவை?
இட இதயத்தமனி, வல இதயத்தமனி.
6. இதயத்திலிருந்து உடலின் பல பகுதிக்கும் குருதியை எடுத்துச் செல்லும் குருதிக் குழாய்கள் யாவை?
தமனிகள்.
7. தமனிகளில் பெரியது எது?
பெருந்தமனி.
8. உடலின் பல பகுதிகளிலிருந்தும் இதயத்திற்குக் குருதியைக் கொண்டுவரும் குழாய்கள் எவை?
சிரைகள்.
9. சிரைகளில் பெரியவை எவை?
மேற்பெருஞ்சிரை, கீழ்ப்பெருஞ்சிரை.
10. மேற்பெருஞ்சிரையின் வேலை யாது?
உடலின் மேற்பகுதிகளிலிருந்து இதயத்திற்குக் குருதியைக் கொண்டு வருவது.
11. கீழ்ப்பெருஞ்சிரையின் வேலை என்ன?
உடலின் கீழ்ப்பகுதிகளிலிருந்து குருதியைக் கொண்டு வருவது.
12. ஒர் குருதிக்குழாய் தமனியா சிரையா என்று எப்படி கண்டறிவாய்?
குருதி துள்ளித் துள்ளி வந்தால் தமனி ஒரே சீராக வந்தால் சிரை.
13. தமனியில் திறப்பிகள் இல்லை; சிரையில் உண்டு. ஏன்?
தமனியில் அழுத்தம் அதிகம். ஆகவே திறப்பிகள் இல்லை. சிரையில் அழுத்தம் குறைவு. ஆகவே, திறப்பிகள் உண்டு.
14. தமனிகளையும் சிரைகளையும் இணைக்கும் நுண்ணிய குழாய்கள் யாவை?
தந்துகிகள்.
15. இதயத்தின் அறைகள் யாவை?
1. மேலறை இட மேலறை, வல மேலறை.
2. கீழறை இடக்கீழறை, வலக்கீழறை.
16. ஈரிதழ்த் திறப்பி என்றால் என்ன?