பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


25. பிஏ இடைநேரம் என்றால் என்ன?

மின் இதய வரைவின் அலகு. இதய மேலறை - கீழறைக் கணுவின்மூலம் நடைபெறும் கடத்தல், முனைச் செயல் நீக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இயல்பான நேரம் 0-18 வினாடி.


2. குருதி

26. குருதி இயல் என்றால் என்ன?

குருதியமைப்பு, தோற்றம், வேலை, நோய் ஆகியவை பற்றி ஆராயும் மருத்துவத் துறை.

27. குருதிமூலக் கண்ணறைகள் என்றால் என்ன?

சிவப்பு எலும்புச் சோற்றின் முதன்மையான கண்ணறைகள். இங்குக் குருதியணுக்களின் எல்லா வகைகளும் உண்டாகின்றன.

28. குருதி என்பது யாது?

இது ஒரு நீர்மத் திசு. உடலில் ஓடுவது.

29. இதன் அமைப்பு யாது?

நீர் 79%. கண்ண றைகள் 12%, புரதம் 7%, ஏனைய கெட்டிப் பொருள்கள் 2%.

30. குருதிக் கண்ணறைகள் யாவை?

சிவப்பணுக்கள், வெள்ளணுக்கள், தகட்டணுக்கள், கணிமம் (பிளாஸ்மா) என்பவை.

31. குருதி உறைதல் என்றால் என்ன?

குருதி காற்றில் பட்டுத் தெளிநீராகவும் சிவப்பணுக் களும் வெள்ளணுக்களும் சூழ்ந்த வைபிரின் இழைகளாகவும் பிரியும் நிகழ்ச்சி.

32. இதை உண்டாக்கும் காரணிகள் யாவை?

1. திராம்பின்
2. வைபிரினோஜன்
3. கால்சிய உப்புகள்.

33. இதன் நன்மைகள் யாவை?

1. வெட்டுக்காயம் மூடப்படுகிறது.