பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


1. உலர் அழுகல்
2. ஈர அழுகல்
3. வளியழுகல்.

130. சளி ஒழுக்கு என்றால் என்ன?

மூக்கிலிருந்தும், குடல், கண் முதலிய பகுதிகளிலிருந்தும் சளி வெளிவருதல்.

131. நீர்ப் பெரு வயிறு என்றால் என்ன?

மகோதரம். உட்சூழ் படலக் குழியில் நீர் திரண்டிருத்தல்.

132. குள்ளமை என்றால் என்ன?

குன்றிய வளர்ச்சி. மரபணுக் குறைபாட்டினால் ஏற்படுவது. இதனால் பகுதிகளின் வீதப்பொருத்தம் மாறும். குழந்தைப் பருவத்தில் அல்லது காளைப் பருவத்தில் மூளையடிச் சுரப்பி குறைவாகச் சுரப்பதால் இது உண்டாவது.

133. மயங்கி விழுதல் என்றால் என்ன?

மூளை சட்டென்று குருதிச் சோகை அடையும்பொழுது ஏற்படும் மயக்க நிலை.

134. ஒவ்வாமை என்றால் என்ன?

தூசி, தூள் முதலிய ஒவ்வாப்பொருள்களுக்கு உடல் உண்டாக்கும் இயல்பு நீங்கிய தடுப்புத் துலங்கல்.

135. நீர்க்கோவை என்றால் என்ன?

கண்ணிலிருந்தும் மூக்கிலிருந்தும் நீர் வடிதல்.

136. அரக்கமை என்றால் என்ன?

பருவ முதிர்ச்சிக்கு முன் மூளையடிச் சுரப்பி மிகுதியாகச் சுரப்பதால் உண்டாகும் அதிக வளர்ச்சி. இது ஒரு குறை நோய்.

137. சொத்தை என்றால் என்ன?

பற்சிதைவு அல்லது எலும்புச் சிதைவு.

138. தோல் வறட்சி என்றால் என்ன?

இயல்பற்ற அளவுக்குத் தோல் வளரும் நோவு.

139. விந்தொழுக்கு என்றால் என்ன?

தானாகவே விந்து வெளியேறுதல். இது ஒரு இயற்கை வெளிப்பாடே அளவுக்கு மீறும்பொழுது மருத்துவரை