பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116


இவர்களுக்குப் பெரியம்மை வருவதில்லை.

17. இவர் அம்மை குத்துதலை எந்த ஆண்டு கண்டறிந்தார்?

1796 இல் கண்டறிந்தார்.

18. இதிலுள்ள அடிப்படை என்ன?

நோய்க்கு எதிராக எதிர்ப்புப் பொருள்கள் உண்டாகின்றன.

19. கால்நடை நோய்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? அவை யாவை?

இரண்டு வகை.
1. தொற்றும் நோய்கள்
2. தொற்றா நோய்கள்.

20. இவை பரவக் காரணிகள் யாவை?

நச்சுயிரிகள், குச்சிவடிவ உயிர்கள், பூஞ்சைகள்.

21. நமக்கும் கால்நடைக்கும் பொதுவாக வரும் இரு நோய்கள் யாவை?

1. அம்மை
2.என்புருக்கி நோய்.

22. கால்நடைக் கொள்ளை நோய் என்றால் என்ன?

இது தீமை தருவது, தொற்றக்கூடியது. கால்நடையில் காய்ச்சல் உண்டாகும், கழிச்சலும் இருக்கும். சளிப் படலத்திலிருந்து ஒழுக்கும் இருக்கும். ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படுவது. மூச்சு மூலமும் மாசுள்ள பொருள்களைத் தொடுவதின் மூலமும் ஏற்படுவது. தடுப்பு மருந்து உள்ளது.

23. கோமாரி எவ்வாறு உண்டாகிறது?

இது ஒரு தொற்றுநோய், ஆவைன் நச்சுயிரியினால் உண்டாவது, பசுவின் காம்பிலும் மடியிலும் புண்களை ஏற்படுத்துவது. இதன் மித வடிவம் மனிதரைத் தொற்றக் கூடியது.

24. நாய்க்கடி என்றால் என்ன?

நச்சுயிரியினால் உண்டாகும் கொடிய நோய். இதன் அறிகுறிகள் நரம்பு உறுத்துணர்ச்சிகள், மூளைச்சேதம், நடக்க இயலாமை, இறுதியில் சாவு. இதற்குப் பண்டுவம்