பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28

65. சிற்றுணரிகள் என்றால் என்ன?

நண்டின விலங்குகளில் உணரிகளுக்கு முன்னுள்ளவை, சிறியவை, கணுக்களாலானவை. ஓரினை முதல் உணர் உறுப்புகளே சிற்றுணரிகள் ஆகும்.

66. மட்டப்பட்டு என்றால் என்ன?

கூட்டுப்புழுப் பருவம் தாண்டி முதிர்ந்த நிலையில் பட்டுப் பூச்சி வெளிவந்தவுடன், அதன் கூட்டிலிருந்து எடுக்கப்படும் நூல்.

67. தரத்தில் மிகக் குறைந்தது. நிமிளை என்றால் என்ன?

மஞ்சள் நிறப்படிவ உயிர்ப்பிசின். அணிகலன்களில் பயன்படுவது.

68. மாலதியான் என்பது யாது?

பாதுகாப்பான பூச்சிக்கொல்லி.

69. மெலானிள் என்பது என்ன?

தாவரங்களிலும் விலங்குகளிலும் காணப்படும் நிறமித் தொகுதிகளில் ஒன்று.


6. முதுகு எலும்புள்ள விலங்குகள்

1. ஆம்பியாக்கஸ் என்பது யாது?

இது ஒரு முனைக்கூர் உயிரி. புழுவிற்கும் மீனுக்கும் இடைப்பட்ட முதுகுத் தண்டுள்ள விலங்கு.

2. மீன்களின் சிறப்பியல்புகள் யாவை?

1 நீரில் மட்டுமே வாழ்பவை.
2. மூச்சுறுப்புகள் செவுள்கள்.
3. செதில்கள் உடலை மூடியுள்ளன.
4. உடல் வெப்பநிலை சூழ்நிலைக்கேற்ப மாறும்.
5. காற்றுப்பை மிதக்க உதவும் உறுப்பு.

3. நன்னீர் மீன்கள் யாவை?

கெளுத்தி, கெண்டை முதலியவை.

4. மீன்கள் அதிகம் எங்க வாழ்கின்றன?

கடல் நீரில் வாழ்கின்றன.