பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34

(மண்புழு) முதலியவற்றில் காணப்படுவது.

52. ஆந்தையின் சிறப்பியல்புகள் யாவை?

இரவில் இரைதேடும் பறவை. அலறுவது, கூடு கட்டாதது. தலையைப் பின்பக்கம் திருப்பிப் பார்ப்பது.

53. இரையும் நாரை என்பது யாது?

வட அமெரிக்கப் பறவை, அழியும் நிலையில் உள்ளது. இதன் கொம்பிரைச்சல் குறிப்பிடத்தக்கது. உயிரியலார் இதன் வகைகளைக் காப்பாற்ற முயன்று வருகின்றனர்.

54. விரல்மூடு பறவைக்கு ஒர் எடுத்துக்காட்டு தருக.

நான்கு விரல்களும் விரலிடைத்தோலினால் இணைக்கப்பட்டிருக்கும். எ-டு வாத்து.

55. உப்புச் சுரப்பிகள் பறவைகளுக்கு எவ்வாறு பயன்படு கின்றன?

கடல் பறவைகள் ஊடுபரவலைக் சரி செய்யத் தங்கள் தலையில் கொண்டுள்ள ஓரிணைச் சுரப்பிகள். இவை உப்புகளைச் சுரப்பவை.

56. அடைகாத்தல் என்றால் என்ன?

முட்டையிடும் பறவைகள் தங்கள் முட்டைகளுக்குப் போதிய வெப்பம் அமைத்துப் பொரிய வைத்தல். பெட்டைக்கோழி தன் முட்டை மீது அமர்ந்திருத்தல். இது அடைக்காக்கும் எந்திரத்தின் மூலமும் செய்யப்படுகிறது.

57. பெற்றோர் பாதுகாப்பு என்றால் என்ன?

இளம் உயிர்கள் நன்கு வளர்ந்து தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் நிலையை அடையும் வரை அவை தங்கள் பெற்றோர்களால் பேணப்படும். இது பாலூட்டிகளிடமும், பறவைகளிடமும், மீன்களிடமும் காணப்படுகிறது.

58. பென்குயின் பறவையின் சிறப்பென்ன?

தென் கடல் பகுதி வாழ் பறவை. பறக்கும் திறனற்றது. கூடுகட்டத் தெரியாது. முன் புறத்துறுப்புகள் துடுப்புகளாகியுள்ளதால் அவற்றைக்கொண்டு நீரில் நீந்தும். விரல் இடைத்தோல் உண்டு. முட்டையிடவே கரைக்கு