இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- அற்றுப்போன துதிக்கை விலங்கு. மிகப் பழங்காலத்தைச் சார்ந்தது.
78. தடிமத்தோல் விலங்குகள் யாவை?
- யானை, நீர் யானை.
79. ஒற்றைக் கொம்பன் என்பது யாது?
- காண்டாமிருகம். தடித்த தோலுள்ள பெரிய விலங்கு. தாவர உண்ணி. மூக்கிற்கு மேல் நேரான ஒரு கொம்பு இருக்கும். இது ஒரு பாலூட்டி.
80. நீர் யானை என்றால் என்ன?
- பெரிய தலை, மூஞ்சி, தடித்த தோல், கன உடல், குறுகிய கால்கள், மயிரற்ற உடல் ஆகியவற்றைக் கொண்ட பாலூட்டி. தாவர உண்ணி நீரில் கிடப்பது. ஒரே அளவுள்ள கால்கள். காட்சிச்சாலை விலங்கு.
81. ஒட்டகத்தின் சிறப்பு யாது?
- ஒரு பாலூட்டி. பாலைவனக்கப்பல். சவாரி செய்யவும் பொதி சுமக்கவும் பயன்படுவது.
82. அணில் குரங்கு என்பது யாது?
- பொன்னிற மயிருள்ள சிறிய தென்னமரிக்கக் குரங்கு.
83. புதிதாக இரு குரங்குச் சிறப்பினங்களைக் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?
- டச்சு அறிவியலாரான மார்க் வான் ரூஸ்மாலன். இவற்றை 1990 களில் கண்டறிந்தார்.
84. விலங்குகளில் மனிதன் போல் நடப்பன யாவை?
- கரடி, மனிதக்குரங்கு.
85. கடலரிமா என்றால் என்ன?
- வட பசிபிக் பெருங்கடலில் வாழும் சீல் என்னும் விலங்கு மீன் உண்ணும் பாலூட்டி. இதன் தோலுக்கும் எண்ணெய்க்கும் வேட்டையாடப்படுகிறது.
86. வௌவால்களின் சிறப்பென்ன?
- பறக்கும் பலூட்டிகள். இருட்டில் வாழ்ந்து இரவில் வெளிவருபவை. கேளா ஒலிளைக் கேட்பவை.
87. பறக்கும் நரி என்றால் என்ன?
இது பெரிய பழந்தின்னி வௌவால். இதன் சிறகு மட்டும்