இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42
தாம் செய்த கனி ஈக்கள் வாயிலாக கண்டறிந்தார்.
15. பரிமாற்றக் கலப்பு என்றால் என்ன?
- பெற்றோரின் பாலினால் குறிப்பிட்ட பண்பின் மரபுரிமை பாதிக்கப்படுகிறதா என்பதை ஆய்வது.
16. திசுவியல் என்றால் என்ன?
- திசுக்களை ஆராயுந்துறை.
17. திசு என்றால் என்ன?
- குறிப்பிட்ட வேலையைச் செய்யும் கண்ணறைகளின் தொகுதி. ஒரே அமைப்புள்ளது. தூண்டலுக்கேற்ற துலங்களைத் தெரிவிப்பது. எ-டு தசை.
18. நம் உடலிலுள்ள ஐவகை திசுக்கள் யாவை?
1. மேல்படலத்திசு | - | புறத்தோல், வாய், சுரப்பி. |
2. தசைத்திசுகள் | - | வரித்தசை, வரியில்லாத்தசை. |
3. தாங்குதிசுகள் | - | இணைப்புத்திசு, எலும்புத்திசு. |
4. நரம்புத்திசு | - | மூளை நரம்புகள் |
5. நீர்மத்திசு | - | குருதி. |
19. திசு வளர்ப்பு என்றால் என்ன?
- தகுந்த ஊடகத்தில் கண்ணறைகள், திசுக்கள், உறுப்புகள் ஆகியவற்றைப் பேணல்.
20. திசுக்களின் பொதுவான வேலைகள் யாவை?
- 1. தாங்குதல் அளித்தல்
- 2. பாதுகாப்பு அளித்தல்
- 3. இயக்கம் அளித்தல்
- 4. தூண்டலுக்கேற்ற துலங்கலை உண்டாக்கல்.
- 5. ஊட்டப்பொருள்களையும், கழிவுகளையும் எடுத்துச் செல்லுதல்.
21. இணைப்புத்திசு என்றால் என்ன?
- தாங்குதல், பாதுகாப்பு, பழுதுபார்த்தல் முதலிய வேலைகளைச் செய்வது. தோலுக்குக் கீழ் உள்ளது.
22. கொழுப்புத்திசு என்றால் என்ன?
- திசுக்களில் ஒரு வகை. இதில் வெண் கொழுப்பு அல்லது மாநிறக் கொழுப்பு உண்டு.
23. உயிர்வளிக்குறை என்றால் என்ன?