இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- இது நரம்புத்திரை. இதில்தான் பொருளின் உருவம் விழுகிறது.
302. கண்மணி என்பது யாது? இதன் வேலை என்ன?
- கண்ணின் கருவிழிப் படலத்திலுள்ள துளை. ஒளி உட்செல்வதைக் கட்டுபடுத்துவது.
303. ஒரு பொருளை நாம் எவ்வாறு பார்க்கிறோம்?
- விழித்திரையிலுள்ள கோல்களும் கூம்புகளும் ஒளியாற்றலை நரம்பாற்றலாக மாற்றுகின்றன. இதைப் பார்வை நரம்பு மூளைக்குத் தெரிவிக்கும் பொழுது, நாம் பொருளின் உருவை உணர்கிறோம்.
304. கண்தக அமைதல் என்றால் என்ன?
- பொருள்களின் தொலைவிற்கேற்ப விழிவில்லையின் பருமன் கூடிக்குறைகிறது. சிறப்பாக, அருகிலுள்ள பொருள்களின் பிம்பம் திரையிள் விழிக்குவியத் தொலைவு குறையுமாறு விழிவில்லையின் பருமன் அதிகமாவதற்குச் கண்தக அமைதல் என்று பெயர். இதற்குக் குற்றிழைத்தசை உதவுகிறது.
305. கண்ணில் எங்குப் பிம்பம் உண்டாகிறது?
- மூன்றாம் திரையான விழித்திரையில்.
306. குவியாட்பார்வை என்றால் என்ன?
- கண் குறைபாடு வில்லை மூலம் ஒளிக்கதிர்கள் ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு ஒரே சமயத்தில் குவியாத நிலை. கதிர்கள் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் செல்லும்.
307. நிறப்பிறழ்ச்சி நீக்கி என்றால் என்ன?
- நிறப் பிறழ்ச்சியைப் போக்கும் கண்ணாடி வில்லை.
308. நிறப்பிறழ்ச்சி நீக்கு ஆய்வு என்றால் என்ன?
- நிறப்பிறழ்ச்சியைப் போக்கச் செய்யும் சிறிய ஆய்வு.
309. நிறப்பார்வை என்றால் என்ன?
- இது ஒரு பார்வைக் குறைபாடு, நிறமற்ற பொருள்கள் நிறமுள்ள பொருள் போல தெரியும். நிறங்கள் நிறைவாக வெளிப்படா.
310. குருட்டுப்புள்ளி என்றால் என்ன?