பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108


இது ஒரு கட்டுமானப் பொருள். இது 1824இல் ஆங்கில நாட்டைச் சார்ந்த கொத்தனார் ஜோசப் ஆஸ்பிடின் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்காரை கால்சியம் சிலிகேட், கால்சியம் அலுமினேட் ஆகியவற்றின் கலவை. இதில் சிறிது ஜிப்சமும் உண்டு.

139. சிமெண்டு இறுகுதல் என்றால் என்ன?

சிமெண்டு என்னும் படிகாரை நீரை உட்கவர்ந்து கெட்டிப்பொருள் ஆதல். இக்காரையிலுள்ள சேர்மங்களின் நீரேற்ற வினையும் இவ்வினையைத் தொடர்ந்து கால்சியம் சிலிகேட் சேர்மங்கள் சிதைவடைவதும் இதற்குக் காரணங்கள் ஆகும்.

140. வனைபொருள்கள் என்றால் என்ன?

அதிக உருகுநிலையிலுள்ள கனிமங்கள், பயனுள்ளவை. எ-டு மட்பாண்டம், பீங்கான்.

141. கொழுமண் என்றால் என்ன?

காரை அல்லது களிமண் துளைப்பகுதியின் மீது பூசப் பயன்படுவது. இதனால் காற்று அல்லது நீர் உள்ளே செல்ல இயலாது.

142. வெளுப்பிகள் என்றால் என்ன?

நிறம் நீக்க அல்லது வெளுக்கப் பயன்படும் வேதிப் பொருள்கள். எ-டு குளோரின், கந்தக இரு ஆக்சைடு.

143. வெளுக்கும் தூள் என்றால் என்ன?

சலவைத்துள். வெண்ணிறத்தூள். கால்சியம் ஆக்சி குளோரைடு. நீரிலுள்ள நோய் நுண்ணங்களைக் கொல்லப் பயன்படுவது.

144. எபோனைட் என்றால் என்ன?

வல்கனைட் ரப்பருடன் கந்தகத்தைச் சேர்த்துக் கெட்டியாக்கிச் செய்யப்படும் கடினமான கரிய காப்புப் பொருள்.

145. நிலைவளி என்றால் என்ன?

அழுத்தத்தால் மட்டுமே நீர்மமாக்க இயலாத வளி. தன்மாறுநிலை வெப்பநிலைக்கு மேலுள்ளது.

146. வளித்துப்புரவு என்றால் என்ன?