பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128


கார்பன் கலவை. முதன்மையாகப் பெண்டேன், கெக்சேன் ஆகியவற்றைக் கொண்டது.

135. பாறை எண்ணெய்ப் பொருள்கள் (பெட்ரோ வேதிப் பொருள்கள் என்றால் என்ன?

பெட்ரோலியம் அல்லது இயற்கை வளியிலிருந்து உண்டாகும் பொருள்கள்.

136. பெட்ரோல் என்பது என்ன? பயன் யாது?

ஆவியாகக் கூடிய அரிய கலவை. ஊர்தி எரிபொருள். ஒரு நாட்டின் அதிக பொருள்வளம் இதைச் சார்ந்ததே.

137. பெட்ரோலை எப்படிப் பெறலாம்?

பெட்ரோலியத்தை வடித்துப் பகுத்துப் பெறலாம்.

138. பெட்ரோலிலுள்ள கரிமப் பொருள்கள் யாவை?

இவை முதன்மையான அய்டிரோகார்பன்கள். கெப்டேன், கெக்சேன், அக்டேன்.

139. பெட்ரோலேட்டம் என்பது என்ன?

பெட்ரோலிய இழுது. தூய்மை செய்யப்பட்ட அய்டிரோகார்பன் கலவை. அரைக்கெட்டி நிலையிலுள்ள மஞ்சள்நிற பாரபின்.

140. டிரிப்டேனின் பயன் யாது?

வானப் போக்குவரவு எரிபொருள்.

141. லூசிஜன் என்பது யாது?

காற்றுடன் கலக்கப்பட்ட விளக்கு எரிஎண்ணெய்.

142. சாராயம் என்றால் என்ன?

ஈத்தேனிலிருந்து பெறப்படும் கரிமக்கூட்டுப் பொருள்.

143. இதன் பண்புகள் யாவை?

நீர்மநிலையில் உள்ளது. எளிதில் தீப்பிடிக்கும் ஆவியாகும். எரிச்சலைத் தரக்கூடிய சுவை. இனிய பழச்சாறு போன்ற மணம்.

144. இதன் பயன்கள் யாவை?

1. ஊக்கியாக இருப்பதால் குடிக்கப் பயன்படுவது. 2. அயோடின், கற்பூரம் முதலியவற்றைக் கரைப்பது. 3. எரிபொருள்.