பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144


கரையக்கூடிய வெண்ணிறப்படிகம். வலுவுள்ள ஒடுக்கி. ஆக்சிஜனை உறிஞ்சுவது. புகைப்படக் கலையில் பெருக்கி, ஆக்சிஜனை மதிப்பிடப் பயன்படுவது.

301. ரேயானின் பயன்கள் யாவை?

மரக்கூழிலிருந்து பெறப்படும் செயற்கை இழை. துணிகள் செய்யப் பயன்படுவது.

302. இதன் வகைகள் யாவை?

1. விஸ்கோஸ் ரேயான்
2. அசெட்டேட் ரேயான்.

303. ரிசினோலெயிகக் காடியின் பயன் யாது?

மஞ்சள்நிற நீர்மம். சவர்க்காரம் செய்யப் பயன்படுவது.

304. கார்பாலிகக்காடி என்றால் என்ன?

பினாயில், தொற்றுநீக்கி.

305. வேம்புப்பொன் என்றால் என்ன?

நல்ல பயன்தரும் சூழ்நிலைத் தகவுள்ள தொற்றுக்கொல்லி. வேம்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டது. பேராசிரியர் கோவிந்தாச்சாரியாரும் அவர்தம் குழுவினரும் உருவாக்கினார்கள் (1994).

14. பல்வகை

1. கிமு 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய வேதியியலார் யார்?

நாகார்கனர்

2.இந்தியத் தொழில் துறை வேதியியலின் தந்தை யார்?

பி. சி. ரே

3. இவர் கண்டுபிடித்த வேதிப்பொருள் என்ன?

மர்க்குரஸ் நைட்ரேட்

4. இவர் எழுதிய சிறந்த வேதிநூல் எது?

இந்து வேதியியல்

5. குறிப்பிடத்தக்க இந்திய வேதியியலார் யார்?

சி.என். இராவ். திண்ம வேதியியலை ஆராய்ந்தவர்.

6. ஜி. என். இராமச்சந்திரன் பங்களிப்பின் சிறப்பு என்ன?

நோபல் பரிசு பெறத்தக்க அளவுக்குச் சிறப்பு வாய்ந்த தமிழ் நாட்டு இயற்பியலார். இவர் ஆராய்ந்த துறை