பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25


ஈதல் மூலக்கூறு. ஓரிணை மின்னணுக்களை வழங்கி ஈதல் பிணைப்பை உண்டாக்கும் மூலக்கூறு அல்லது அயனி.

51. படிமூலி (ரேடிகல்) என்றால் என்ன?

ஒரு தனி அணுபோல் நடக்கும் அணுத்தொகுதி. ஒரு சேர்மத்திலிருந்து மற்றொரு சேர்மத்திற்குச் செல்லும்பொழுது மாறாதிருப்பது.

52. சிறுபடி (ஆலிகோமர்) என்றால் என்ன?

ஒப்பிடத்தக்க வகையில் ஒரு மூலக்கூறில் சிறிய ஒருபடி அலகுகளைக் கொண்டது.

53. கட்டவிழ்படிமூலி என்றால் என்ன?

ஒற்றை மின்னணுவுள்ள அணு அல்லது அணுத்தொகுதி.

54. ஈரயனி என்றால் என்ன?

இருமுனை அயனி. நேர்மின்னேற்றமும் எதிர்மின்னேற்றமுங் கொண்டது.

55. மூவணு என்றால் என்ன?

அணுக்கரு ஒரு முன்னணுவையும் இரு நடுநிலையணுக் களையுங் கொண்டது.

56. புறப்பெருக்கம் என்றால் என்ன?

ஒரு பொருள் புறச்சேர்ப்புப் பொருள்களால் அளவில் பருத்தல். எ-டு. படிகவளர்ச்சி.

57. வளியோட்டம் என்றால் என்ன?

ஒரு சிறுதுளை வழியே மூலக்கூறுகள் செல்லுதல்.

58. சீராக்கல் என்றால் என்ன?

நேர்த்தொடர் அய்டிரோகார்பன்களை வளையச் சேர்மமாக்குதல். வினையூக்கி பிளாட்டினம்.

59. வேதிப்போர் என்றால் என்ன?

போர் வினைகளில் வேதியாற்றலைப் பயன்படுத்துதல். எ-டு குளோரின். ஆனால், குண்டுகளில் இயல்பாற்றலே பயன்படுகிறது.

60. வேதி ஒளிர்வு என்றால் என்ன?

வெப்பநிலையில் எவ்வகைத் தோற்ற மாறுபாடுமில்லாமல், ஒரு வேதிவினையில் உமிழப்படும் ஒளி.