பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47


 10% இரும்பு (III) குளோரைடும் அடர் அய்டிரோ குளோரிகக் காடியும் ஆர்சனாலும் சேர்ந்த கலவை.

67. இதன் பயன் யாது?

பெண்டோஸ் சர்க்கரையை ஆய்ந்தறியப் பயன்படுவது. இச்சர்க்கரையை இவ்வினையாக்கியுடன் சேர்த்துக் கொதிக்க வைக்கப் பச்சைநிறம் உண்டாகும்.

68. பழுப்புவனைய ஆய்வு என்றால் என்ன?

நைட்டிரிகக் காடியைக் கண்டறியும் ஆய்வு. பெரஸ் சல்பேட்டுக் கரைசலில் சிறிது அடர் கந்தகக் காடியைச் சேர். பின் இக்கலவையில் சிறிது அடர்நைட்டிரிக காடியைச் சேர். நீர்மட்டத்தில் பழுப்பு வளையம் ஏற்படும்.

69. பதிலீட்டு வினை என்றால் என்ன?

இடப்பெயர்ச்சி வினை. மீத்தேனிலுள்ள அய்டிரசன் அணுக்களைக் கதிரவன் ஒளியில் குளோரின் அணுக்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடப்பெயர்ச்சி செய்யும். இதற்குப் பதிலீட்டு வினை என்று பெயர்.

70. அய்டிரோகுளோரிக அமிலத்திற்கு ஆய்வு என்ன?

வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலை இந்த அமிலத்துடன் சேர்க்க, வெள்ளிக் குளோரைடு வீழ்படிவு உண்டாகும்.

71. இந்த அமிலத்தின் பயன்கள் யாவை?

அரசநீர்மம் தயாரிக்க, குளோரின் தயாரிக்க.

72. நெசலர் கரைசல் என்றால் என்ன?

ஜூலியஸ் நெசலர் என்பவர் பெயரால் அமைந்தது. அம்மோனியாவைக் கண்டறியப் பயன்படுவது. இவ்வளியுடன் இக்கரைசலைச் சேர்க்க மாநிற வீழ்படிவு

73. இக்கரைசலை எவ்வாறு பெறலாம்?

பொட்டாசியம் அய்டிராக்சைடு கரைசலில் பொட்டாசியம் மெர்க்குரிக் அயோடைடைச் சேர்த்துப் பெறலாம்.

74. வினையூக்கி என்றால் என்ன?

தான் மாறுபடாமல் தன்னுடன் சேருகின்ற பொருளை