பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72


மென்மையான வெண்ணிறத்துள். காலமைன்கரைசலில் பயன்படுவது. தோல்நோய் மருந்து.

73. துத்தநாகக் குளோரைடின் பயன்கள் யாவை?

அதிகம் நீர் இருக்கும் வெண்ணிறப் பொருள். நீர் நீக்கும் பொருள். மரத்தைப் பாதுகாப்பது. துத்தநாக ஆக்சைடுடன் சேர்ந்த பசை பற்காரையாகப் பயன்படுவது.

74. துத்தச் சல்பைடின் பயன் யாது?

வெண்ணிறப் பொருள். வண்ணக் குழைவுகளில் நிறமி.

75. சிர்கோனியத்தின் பயன்கள் யாவை?

அரிய உலோகம். உலோகக் கலவைகள் செய்யவும் தீச்சுடர்த் தடைச் சேர்மங்கள் செய்யவும் பயன்படுவது.

76. சிர்கோனியம் சிலிகேட்டின் என்றால் என்ன?

சிறிது மஞ்சள் நிறமுள்ளது. நீரில் கரையாது. வெள்ளையாக இருப்பின் மாணிக்கம். நிறமாக இருப்பின் உருகாப் பொருள்.

77. எட்டர்பியத்தின் பயன் யாது?

வெள்ளி போன்ற உலோகம்.எஃகின் பண்பை உயர்த்தப் பயன்படுவது.

78. எட்டிரியத்தின் பயன் யாது?

வெண்ணிற உலோகம். உலோகக் கலவைகள் செய்ய.

79. சீயோலைட்டின் பயன்கள் யாவை?

நீரேற்றிய அலுமினோ சிலிகேட் தொகுதியில் ஒன்று. இயற்கையாகக் கிடைப்பது. சர்க்கரையைத் துய்மைப்படுத்தவும் கடின நீரை மென்னிராக்கவும் பயன்படுவது.

80. வெண்ணியத்தின் பயன்கள் யாவை?

காரீய (H) கார்பனேட்டு அய்டிராக்சைடு. வெள்ளை வண்ணக் குழைவிலும் வண்ணக் குழைவிலும் இதன் நிறமி பயன்படுவது.

81. வெனாடியத்தின் பயன்கள் யாவை?

கடினமும் உறுதியும் வாய்ந்த உலோகம். இது வெனாடியம் எஃகுவும் அதன் சேர்மங்களும் செய்யப்