பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95


அப்பரகம். ஒரு கனிமம். மின்காப்புப் பொருள், கண்ணாடி மாற்றுப் பொருள்.

4. காக்கைப் பொன் உற்பத்தியில் முன்னணியிலுள்ள நாடு எது?

இந்தியா, பீகார், ஒரிசா, மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இது அதிகம் கிடைக்கிறது.

5. போரிகக் காடி என்றால் என்ன?

தொடுவதற்குச் சவர்க்காரம் போன்று மென்மையாக இருக்கும். வெண்ணிறப் படிகம். மித நச்சுத்தடை. மெழுகுப் பொருள் செய்வதில் பயன்படுவது.

6. கரி என்றால் என்ன?

மின்சாரத்தையும் வெப்பத்தையும் நன்கு கடத்துவது. மின்கலங்களின் நேர்மின் வாயான கரித்தண்டுகள் செய்யப் பயன்படுவது.

7. கரியாக்கஞ் செய்தல் என்றால் என்ன?

கார்பனேட்டுகள் என்னும் உப்புகள் உண்டாகக் கரியைக் கரி ஈராக்சைடுடன் சேர்த்தல்.

8. மரக்கரி என்பது யாது?

படிக வடிவமற்ற அடுப்புக் கரி. வளிகளை உறிஞ்சும் நீர்மங்களிலிருந்து மாசுகளை நீக்கப் பயன்படுவது.

9. கல்கரியின் பயன் யாது?

ஊதுலையில் இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரிப்பதில் ஒடுக்கியாகப் பயன்படுதல்.

10. புகைக்கரி என்றால் என்ன?

கரியின் வேற்றுரு. மூடிய தொகுதியில் குறைவான காற்றில் கன எண்ணெய்களை எரித்து இதனைப் பெறலாம். நிறமியாகப் பயன்படுவது.

11. பக்மினிஸ்டர் புல்லரின் என்றால் என்ன?

C60. கரியின் மூன்றாம் வேற்றுரு. அமெரிக்கப் புனைவாளர் பக்மின்ஸ்டர் புல்லர் அமைத்தது. இம் மூலக்கூறு 60 கரியணுக்களைக் கொண்டது. புகை போக்கிக் கரியின் ஒரு பகுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதிக அமைப்பு நிலைப்புத் திறன் கொண்டது.

12. வைரம் என்பது என்ன? பயன் யாது?