பக்கம்:அறிவியல் விருந்து.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயணம் 119 பாதையினின்றும் வழிவிலகியது. ஆனால் அது திரும்பவும் பூமியின் வளிமண்டலத்தால் பின்னோக்கி இழுக்கப் பெறுவதற்கு முன்னர் 113,120 கி.மீ வானவெளியில் பயணம் செய்தது. பயணியரின் எடை 38.6 கிலோகிராம். இரஷ்ய அறிஞர்கள் 345.5 கிலோ கிராம் எடையுள்ள லூனிக்-1 என்ற துணைக்கோளை 1959-ஆம் ஆண்டு சனவரி 2-இல் மதியை நோக்கி அனுப்பினர். சரியான அயனப் பாதையில் அஃது அனுப்பப்பெற்றாலும், அது மதியை அடையவில்லை; சுமார் 15 திங்கள் காலம் அது கதிரவனைச் சுற்றிக்கொண்டிருந்தது. அமெரிக்காவின் பயனீயர்-IV கதிரவனின் அயனப் பாதைக்குள் பின் தொடர்ந்தது. அதற்குப் பின்னர் இரஷ்யா தம்பத்தகாத அளவிற்கு வேகமாகச் சென்றது. 1956 ஆம் ஆண்டு செப்டம்பர் 14-இல் 34 மணி நேரம் பறந்தபிறகு 390 கிலோ கிராம் எடையுள்ள லூனிக்-11 என்ற இரஷ்யத் துணைக் கோள் மதியினுள் பாய்ந்து அதன் பரப்பில் சம்மட்டி. கருக்கரிவாள் அடையாளம் தாங்கிய மிகச் சிறிய கொடிகளைச் சிதறி எறிந்தது. இதுதான் மனிதன் முதன் முதலாக விண்வெளியிலுள்ள பருப்பொருளின் மீது மற். றொரு பருப்பொருள் தொடர்பு கொள்ளச் செய்ததாகும் அதே யாண்டு அக்டோபர் 4-இல் லூனிக்-11 என்ற துணைக்கோள் மிக விரிந்த ஒர் அயனப் பாதையில் வீசி யெறியப்பெற்றது. இஃது அயன்ப்பாதையில் சந்திரனைச் சுற்றியும் சென்றது. அங்ங்ணம் செல்லும் வழியில்தானாகவே சில ஒளிப் படங்களை" உருத்துலக்கித்* திரும்பவும் தொலைக் காட்சிச் சாதனத்தின் மூலம் 4 இலட்சம் 80 ஆயிரம் கி. மீ. க்கு அ ப் பா லு ள் ள பூமிக்கு 15. ஒளிப்படங்கள்-Photos. 16. a-G# Si svšG-Develop.