பக்கம்:அறிவியல் விருந்து.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#58 அறிவியல் விருத்து காலகை என்பவளுடைய மக்களாகிய காலகேயருன் ஒருவனாகிய வித்யுத் சிகுவன் என்ற அரக்கர் தலைவன் ஒருவனுக்கு மணம் புரிவித்திருந்தான். அந்த மணமக்கள் இளவயதினராக இருந்த காலத்தில் இராவணன் திசைகள் தோறும் சென்று வெற்றி முழக்கம் செய்துவந்தான். மைத்துன உறவு இராவணனுக்கு அடிபணியத் தூண்ட வில்லை. மைத்துனர்களிடையே கடும்போர் நிகழ்ந்தது. சூர்ப்பனகையின் கணவன் கொல்லப்பட்டான். அது முதல் இராவணனுடன் இருக்கவேண்டியவளானாள் கைம் பெண் சூர்ப்பனகை. நாத்தியின் கொடுமை ஏற்படும் என்ற காரணத்தாலோ, வேறு என்ன காரணத் தாலோ இராவணன் சூர்ப்பணகைக்குத் தண்டா வனத் தில் இருக்க இடம் அமைத்து அவளுக்குத் துணையாகத் தன் ஒன்று விட்ட இளவல்களாகிய கர-து.ாடனர்களை அறுபதினாயிரம் வீரர்களடங்கிய சேனையுடன் காவலும் வைத்தான். இராமனைக் காதலித்த சூர்ப்பனகைக்கு நேர்ந்த அவமானத்தையும் இராவணனுக்கு ச் சூர்ப்பனகை யால் சீதை மீது ஊட்டப்பெற்ற காதல் போதை'யை யும், அது காரணமாக இராவணன் இராமன் கணையால் மாய்ந்ததையும் நாம் அறிவோம். இராவணனை நினைந்து புலம்பும் வீடணன், 'கொல்லாத மைத்துணனைக் கொன்றாய் என் றது.குறித்துக் கொடுமை சூழ்ந்து பல்லாலே இதழ் அதுக்கும் கொடும்பாவி நெடும்பாரப் பழிதீர்ந் தாளோ?' என்று வாய்விட்டு அரற்றுவதில் சூர்ப்பனகையின் நன விலியுளத்தின் போக்கினை வெளிப்படுத்துவதாகக் கருத லாம். இளமையில் தன் இன்பவாழ்க்கைக்கு ஊறு விளை வித்த அண்ணனைக் கொல்வதற்குக் காரணமாக இருப்ப துடன் அவன் குலத்திற்கே காலனையும் கொண்டுவந்து