பக்கம்:அறிவியல் விருந்து.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ அறிவியல் விருந்து திகழ்கின்றது. இதனுடைய கற்றுவழி ஏறக்குறைய வட்ட இடிகமானது. கதிரவனிடமிருந்து இதன் சராசரி தொலைவு 5 கோடி 72 இலட்சம் கல்லாகும். இதன் குறுக் களவு 7,700 கல் என்று மதிப்பிட்டுள்ளனர் வான் நூற் புலவர்கள். இதன் திண்மை நீரின் திண்மையை விட தாலரை மடங்கு அதிகமாக உள்ளது. இதன் விடுபடு நேர் வேகம் விநாடிக்கு ஆறரை மைல். இது பூமியின் எடையில் ஐந்தில் நான்கு பங்கும், பூகவர்ச்சி விசையில் பத்தில் ஒன்பது பங்கும் கொண்டுள்ளது. இக்கோள் விநாடிக்கு இருபத்திரண்டு கல் வேகத்தில் கதிரவனைச் சுற்றி வருகின்றது; சுற்றி வருவதற்கு 210 நாட்களாகின்றன. இது தன் னைத் தானே சுற்றிக்கொள்வதற்குப் பதினெட்டு நாட்களாகின்றன. எனவே, சுக்கிரனில் நாட்காலம் பூமியில் உள்ளதைப்போல் பதினெட்டு மடங்கு அதிகமாக இருக்கும். இதன் ஆண்டு பூமியினது ஆண்டில் நூற்றில் அறுபது பங்கு இருக்கும். திங்களைப் போலவே சுக்கிரனும் பகலவனுக்கும் பூமிக்கும் இடையில் சில நாட்கள் வருகின்றது. இது பூமியோடும் கதிரவனோடும் ஒரே நேர்க்கோட்டில் வருவதற்கு 584 நாட்களாகின்றன. வெள்ளியைக் காண் வேண்டுமாயின், பகலவன் மறைந்த பிறகு சில நாட்கள் மேற்கு வானத்தையும், அல்லது ஞாயிறு எழுவதற்கு முன்பு கீழ்வானத்தையும் நோக்குதல் வேண்டும். இக் கோளும் புதனைப் போலவே கதிரவனைச் சுற்றி வருவதால் என்றும் உச்சி வானைத் தொடுவதே இல்லை. 584 நாட்களுக்கு ஒருமுறை ஞாயிறு மறைந்த பிறகு அரைமணி நேரம் கண்ணுக்குத் தோன்றி பிறகு தாலும் மறைந்துவிடுகின்றது. பிறகு ஒவ்வொரு நாளும் மேற்கு வசனத்தில் சிறிது சிறிதாக உயர்ந்து கொண்டே வருகின்றது. மீண்டும் இது தாடோறும் மெதுவாகக் கீழே