பக்கம்:அறிவியல் விருந்து.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்பம் 7% இரண்டின் எடைகளும் கிட்டத்தட்ட ஒன்றே. இரண்டும் ஒருமுகத்தைக் காட்டிக் கொண்டே கதிரவனைச் சுற்று கின்றன. கதிரவனது ஒளியை இரண்டும் ஒரே முறையில் பிரதிபலிக்கின்றன. இரண்டிலும் காற்றும் இல்லை. நீரும் இல்லை. இரண்டிற்கும் வளர்பிறை, தேய்பிறைத் தோற் றங்கள் உள்ளன. 2. வென்னி கதிரவ மண்டலத்தில் புதனுக்கு அப்பால் இரண்டாம் பிராகாரத்தில் எழிலுடன் திகழ்வது வெள்ளி, திங்களுக்கு அடுத்தபடியாக முன்னிரவிலோ அன்றிப் பின்னிரவிலோ வானத்தில் தனியரசு செலுத்தி வனப்புடன் விளங்குவது இதுவேயாகும். சில நாட்களில் கீழ்வானத்தில் அதிகாலை யில் வெள்ளி முளைக்கின்றது", அப்போது மக்கள் உறக் கத்தை நீத்துத் தம் வாழ்க்கைப் பணியாற்றத் தொடங்கு கின்றனர். 'வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று' என்று ஆண்டாள் பாடுவது காண்க. நெஞ்சை மருட்டிங் இரவு கழிவதையும், சிறிது நேரத்தில் இளஞாயிறு தோன்றி மக்கட்குப் புத்துணர்ச்சியையும் புது நம்பிக்கையையும் அளிக்கப்போவதை முன்னறிவிப்பது இக் கோளாகும். இது வானில் ஒரு சோதிமயமான வைரம் போன்று நெஞ்சை பள்ளும் பான்மையில் மிளிர்கின்றது. உருவம், எடை, திண்மை இவற்றிலெல்லாம் பூமிகை யொத்து அதனுடன் பிறந்த இரட்டைக் குழவி போன்


w--------------------ه

20. Qaisitsif - Venus. 2. திருப்பாவை.43.