பக்கம்:அறிவியல் விருந்து.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்பம் §§ பூமியின் எடை 50 கோடி, கோடி, கோடி டன்கள்: இது நீரைவிட 5.52 மடங்கு அதிகத் திண்மையுடையது. திங்கள் பூமியைச் சுற்றி வருவதற்கும், பூமியின் கவர்ச்சி ஆற்றலே காரணமாகும். பூமியின் நடுக்கோட்டுப் பகுதி களில் இருப்பதைவிட துருவப் பகுதிகளில் இக் கவர்ச்சி ஆற்றல் அதிகம் உள்ளது. நடுக்கோட்டுப் பகுதிகளில் நூறு பவுண்டு எடையுள்ள ஒரு மனிதன் துருவப் பகுதி களில் 19ரித் பவுண்டு எடையுள்ளவனாகக் காணப்படு வான். பூமி ஒரு பெரிய காந்த உருண்டை. காந்தத்திற் குள்ள இரு துருவங்சளும் பூமியின் இரு துருவங்களின் அருகில் அமைந்துள்ளன. இதனாற்றான் இசைகாட்டியி லுள்ள காந்த ஊசியின் ஒரு முனை எப்பொழுதும் வட துருகத்தையே காட்டுகின்றது. பகலவனைப் போலவே பூமியும் புரைகளாக அமைத் துள்ளது. காற்று மண்டலம், நீர் மண்டலம், மண் மண்டலம் என்பவை பூமியின் புரைகளாகும். பூமியின் காற்று மண்டலம் படைப்பின் விந்தைகளுள் ஒன்று. இது இயற்கையன்னை தமக்குக் காவலாக அமைத்த அன்பளிப் பாகும். இது பூமிக்கு ஒரு கவசம் போல் அமைந்து இதனைப் பல தீங்குகளினின்றும் காப்பாற்றுகின்றது. பூமியின் மேலுள்ள கடல்களே அதன் நீர்மண்டலமாகும்; பூமியின் மேற்பரப்பில் முக்கால் பகுதிக்குமேல் கடல் பரவி யுள்ளது. மண்மண்டலம் நான்கு புதைகளாக அனு:மத் துள்ளது. பூமியின் மீது ஒரறிவுடைய உயிர் முதல் ஆறறிவு உயிர்கள்வரை பற்பல விதங்களாகப் பற்பல உருவங்க ளுடன் நடமாடுகின்றன. இத்தனை உயிர்களைப் பெத் றெடுத்தும் நிலமகள் குமரியாகவே உள்ளாள். இன்னும் குழவிகளைப் பெற்ற வண்ணம் இருக்கின்றாள். இவர்