பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
அறிவுக்கு உணவு
 

பழத்தை உரிக்கும் முறை

ஆரஞ்சுப் பழத்தை உரிக்க, கரும்பைச் சீவ, வாழை இலையைக் கிழிக்க, மூங்கிலைப் பிளக்க வேண்டுமானால், நுனியிலிருந்து தொடங்கி அடி நோக்கிச் செல், அது எளிதாக இருக்கும்.

பொதுநலம்

பொதுநலத்திற்கு உழைக்கும் அறிஞர்களை தந்நலத்திற்கு உழைக்கும் மக்கள் விரைவாக வென்றுவிடுவார்கள்.

முன்னது ஆற்றின் ஊற்று நீர் போன்றது. பின்னது காட்டாற்று வெள்ளத்தைப் போன்றது.

அறிவுடைமை

உணர்ச்சி ஒரு செல்வம்! அதனைப் பெற்றதும் துள்ளிக் குதித்து, ஆடி, ஒடி, அதனைப் பாழாக்கிவிடுவது அறிவுடைமை ஆகாது!

அதனை அடக்கி ஆண்டு, ஒருமுறைப்படுத்தி, நேரான வழியில் பயன்படுத்திப் பலனடைவதே அறிவுடைமையாகும்!

வாழ்வு சிறக்க!

பிறருக்கு நீ செய்துள்ள உதவிகள் என்னென்ன என்று எண்ணு! பிறகு எழுது! மேலும் செய் ! உன் வாழ்வு சிறப்படையும்.

வெட்கம்

அயோக்கியன் முகத்தைக் கான யோக்கியன் வெட்கப்படு வதைவிட, யோக்கியன் முகத்தைக் காண அயோக்கியன் வெட்கப்படுவதே அதிகமாய் இருக்கிறது.

இவ்வுண்மையை முன்னவன் முகத்திற்கானும் வெறுப்பும் பின்னவன் முகத்திற் காணும் சிரிப்பும் மெய்ப்பிக்கும்.