பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

அறிவுக்கு விருந்து

பிடுவர். இக்காலத்தில் தமிழ்மொழி தனித்தலைமையை இழந்து தளர்ச்சியுற்று இலக்கிய வளர்ச்சிபெருது மங்கிக்கிடந்தது. பிறகு நாட்டில் ஏற்பட்ட பல்லவர், பாண்டியர்கள் ஆட்சியிலும், சோழர்களின் ஆட்சியிலும் தமிழ்மொழி ஏற்றம்பெற்றது. புலவர்கள் புத்துணர்ச்சி பெற்றுப் புதுப்புதுப் பிரபந்தங்களை இயற்றினர். பக்திப் பாடல்களும் பெருங் காப்பியங்களு ம் தோன்றத் தொடங்கின. காவியங்கள் கல்வியாளர்க்கென்றே இயற்றப்பெற்றன; பக்தி இயக்கத்தின் விளைவாக எழுந்த பாடல்கள் பொதுமக்கள் மனத்தைக் கெளவும் நிலையில் அமைந்தன. வெற்றித் திறத்தால் நாட்டுப் பரப்பைப் பெருக்கிய அரசர்களையும் கொடையாலும் பிறவற்றாலும் புகழ் எய்திய வள்ளல்கள், வேளிர்கள் போன்றவர்களையும் புலவர்கள் கவிதைகளில் அமைத்துப் போற்றினர். கலம்பகம், பரணிபோன்ற பிரபந்தங்கள் அவ் வகையைச் சார்ந்தவை. எனவே, அவர்கள் எளிதில் பொருள் உணரக்கூடிய ஒரு சீரிய நேர்மை அவற்றில் வாய்த்திருந்தது. கற்று வல்லோரும் புலவர்களும் நிரம்பிய அரசவையில் அவர்கள் அனைவரும் வியந்து போற்றும் முறையில் அப் பிரபந்தங்கள் பாடப்பெற்றன. கலிங்கத்துப் பரணி அங்ஙனம் பாடப்பெற்ற நூல்களுள் ஒன்று.

பிரபந்தங்கள் தொண்ணுாற்றாறு என்று சொல்லுவது ஒருவகை மரபு. பிரபந்த இலக்கணம் கூறும் பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கணவிளக்கப் பாட்டியல் ஆகிய நூல்களில் ஒன்றிலாயினும் பிரபந்தங்கள் தொண்ணுற்றாறு என்ற வரையறை காட்டப் பெறவில்லை! அவற்றிற்கு இலக்கணமும் கூறப்பெற வில்லை. அவற்றில் கூறப்பெறும் இலக்கணங்களிலும் மாறுபட்ட கருத்துக்கள் மிளிர்கின்றன. தொண்ணுற்-