பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியும் சமயமும் 113 'நிறையுயிர் முயற்சியின் உள்வனி துரப்பு எழும் அணுத் திரள், என்ற நூற்பாக்களிலுள்ள 'அணுத்திரள் ஒலி' என்பது சமண சமயக் கருத்தாகும். சூ ட | ம ணி திகண்டு இவர்கள் செய்ததாகும். விருத்தப்பாவிலேயே இதனையும் ஆக்கியுள்ளனர். அதிலும் விருப்பப்படியெல்லாம் சமயக் கருத்துக்களைப் புகுத்தியிருக்கின்றனர். காப்புச் செய்யுள், முடிவில் இன்பத்து மூவாமுதல்வனைப் போற்றி என்று தொடங்குகின்றது. பகவன் என்ற சொல்லுக்குப் பொருள் கூறுமிடத்து, பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் என்று கூறப்பட்டிருக்கின்றது. இவ்வாறு பல இடங்கள் உள்ளன. இங்ங்னம் சமணர்கள் சமயத்திற்குச் செய்த தொண்டுகள் யாவும் மொழித் தொண்டுகளாகவே வடிவு கொண்டு பல அரும்பெருந் தமிழ் நூல்களைத் தமிழ் மொழி பெற்றிருக்கின்றது. - சமண பெளத்த சமயங்களின் செல்வாக்குத் தமிழர்களிடம் ஒரு நூதன உணர்ச்சியையும், எதிர்த்து நிற்கும் ஆற்றலையும் உண்டாக்கிற்று. சைவமும் வைணவமும் நாளடைவில் பேராற்றலைப் பெற்றன. இவற்றுள் சைவசமயம் வீ று - ன் வளர்ந்து பிற சமயங்களைத் துரத்தி அவைகளில் ஈடுபட்டிருந்த அரசர்களையும் தன்பால் இழுத்துக்கொண்டது. திருஞான சம்பந்தரால் கூ ன் பா எண் டி ய ன் மீண்டும் சைவ சமயத்தைத் தழுவியதும், திருநாவுக்கரசரால் மகேந்திர 5. டிெ-நூற்பா 7க். அ. வி. 8.