பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்தர்கள் வளர்த்த பைந்தமிழ் i83 சித்தர்மலை, கழுகுமலை முதலிய இடங்களிலுள்ள குகைகளில் பிராமி எழுத்துக்கள் காணப்பெறுகின்றன. இந்தச் சாசனங்கள் தமிழ் மொழியிலிருப்பினும், எழுத்துக்கள் பிராமி எழுத்தாக உள்ளன. இரண்டு: புதுச்சேரிக்குத் தெற்கே பத்துக் கல் தொலைவிலுள்ள அரிக்கமேடு என்று வழங்கப்பெறும் சி. ற் று ரி ல் பூமிக்கடியில் தோண்டிஎடுக்கப்பெற்ற மட்பாண்டங்களில் காணப்படும் எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களே. எனவே, கி. பி. 1800-க்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் பிராமி எழுத்து வழங்கிவந்த செய்தி அறியப்படுகின்றது. பிராமி எழுத்து வழங்கப்பெறுவதற்கு முன்னர் தமிழ் நாட்டில் ஏதோ ஒருவகை எழுத்து இருந்தது. கி. மு. மூன்ரும் நூற்ருண்டிற்குப் பிறகு பிராமி எழுத்து வந்தவுடன் பழைய தமிழ் எழுத்து வழக்கொழிந்து விட்டது. என்ருலும், நீண்டகாலமாக பிராமி எழுத்தில் இல்லாததும் தமிழில் மட்டிலும் உள்ளதுமான ற, ழ' போன்ற எழுத்துக்களை மட்டிலும் விலக்காமல் பிராமி எழுத்துடன் சேர்த்துப் பண்டைத் த மி ழ ர் க ள் வழங்கியிருத்தல் வேண்டும் என்று ஊகம் செய்ய இடம் உண்டு. கடைச் சங்க காலத்தில் பிராமி எழுத்தே வழக்கில் இருந்திருக்கவேண்டும். பிராமி எழுத்திலிருந்து தோன்றியது வட்டெழுத்து ஆகும். நெடுங்காலம் தமிழர் இ வ் வ ட் .ெ ட ழு த் ைத யே வழங்கி வந்தனர். தமிழ்நாட்டிலுள்ள பெளத்தர்களும் சமணர்களும் பிராமி எழுத்திலிருந்து கிரந்த எழுத்து என்ற ஒரு புதுவகை எழுத்தை உண்டாக்கி அதைக் கொண்டு தம் சமய நூல்களை எ ழு திவ ந் த னர். இந்தக் கிரந்த எழுத்திலிருந்துதான் இன்று வழங்கப் பெறும் தமிழ் எழுத்து உண்டாக்கப்பெற்றது; இதையும் கிரந்த எழுத்து என்றே வழங்குகின்றனர். சோழ நாட்டில்