பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு 139 தாயெழிற் றமிழை, என்றன் தமிழரின் கவிதை தன்னை ஆயிரம் மொழியிற் காண இப்புவி அவாவிற் றென்ற தோயுறும் மதுவின் ஆறு தொடர்ந்தென்றன் செவியில் வந்து பாயுநாள் எந்த நாளோ? என்று இக்காலக் கவிஞன் கண்ட கனவை ம்ேளுட்டுக் கிறித்தவப் பெரியார்கள் ஓரளவு நிறைவேற்றியிருக் கின்றனர். பாட்டால் பனுவல் இயற்றிவர்கள்: முறையாகத் தமிழ் கற்ற மேனுட்டு வித் த க ர் க ள் சிறந்த கவிஞர்களாகவும் திகழ்ந்தனர். நவில் தொறும் நூல்நயம் காட்டும் குறள், செழுஞ்சுவை சொட்டும் சிந்தாமணி, கவிதை இன்பம் கொழிக்கும் கம்பனின் இராம காதை ஆகிய நூல்கள் வீரமாமுனிவரின் மனத்தைக் கவர்த்தன. அந்நாளில் சிறந்த தமிழாசிரியர்களாகத் திகழ்ந்த சுப்பிரதீபக் கவிராயர் போன்றவர்களிடம் தமிழ் கற்ற முனிவர், சமண சமயத்தை வி ள க் கி நிற்கும் சிந்தாம்ணிபோல் தமது சமயத்தை விளக்கி நிற்கவல்ல ஒரு பெருங் காவியத்தைத் த மி N ல் செய் ய அவாக்கொண்டார். அந்த ஆசையே தேம்பாவணி என்னும் அருங்காவியமாக வடிவெடுத்தது. இயேசு பெருமானைக் கைத்தாதையாக வளர்த்த சூசையப்பர் வரலாறுதான் இக்காவியத்தின் பொருள். இக்காவியத்தில் திருக்குறளின் சாறு பிழியப்பட்டு, கம்பர் கவிமணம் கமழும்படி ப ட ல் க ள் வார்க்கப் பெற்றுள்ளன. காவியத்திலுள்ள பல பாடல்கள் கம்பன் பாணியில் அமைந்திருப்பதைக் காணலாம். இவர் இயற்றிய 2 திதாசன்-விேதிெகள்