பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தெய்வப் பரணி 7 பொருட்டுக் கதவைத் திறக்குமாறு வேண்டுவதாக இப் பகுதி அமைக்கப் பெற்றுள்ளது. இப் பகுதியிலுள்ள பாடல்கள் யாவும் உவகைச் (சிருங்காரச்) சுவையுடையவை.

சொருகு கொந்தளகம் ஒருகை மேலலைய ஒருகை கீழலைசெய் துகிலொடே திருவ னந்தலினும் முகம லர்ந்துவரு தெரிவை மீர்கடைகள் திறமினே (கொந்து-பூங்கொத்து; அளகம்-கூந்தல்; துகில்-உடை, அனந்தல்-துயிலெழுந்த மயக்கநிலை; தெரிவை-பெண்) மெய்யில ணைத்துருகிப் பைய அ கன்றவர்தாம் மீள்வரெ னக்கருதிக் கூடல்வி னைத்தறவே கையில ணைத்தமணல் கண்பனி சோர்புனலில் கரையவி ழுந்தழுவீர் கடைதிற மின்திறமின். (மெய்-உடல்; பைய-மெல்ல; கூடல் விளைத்தல்-மணலில் சுழித்துக் குறியறிதல், அறவே - சுழியாமல் நீங்கிநிற்க; புனல்-நீர்; என்ற தாழிசைகளில் காதல்சுவை கனிந்து நிற்பதைக் காண்க. அடுத்துப் பேய்களின் தலைவியாகிய காளிதேவியின் சிறப்பும், பேய்களின் இயல்பு முதலிய செய்திகளும் கூறப் பெறுகின்றன. காளிதேவி வாழும் காட்டின் இயல்பு, அதன் நடுவேயுள்ள அவளுடைய திருக்கோவில் அமைப்பு முறை, அவள் வீற்றிருக்கும் சிறப்பு, அவளைச் சூழ்ந்திருக்கும் பேய்களின் தன்மை முதலியவற்றை ஆசிரியர் வருணிப்பது நம்மை வியப்புச் சுவையில் 4. தாழி-47 5. தாழி-51