பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகையிலையின் மகிமை 43 மறுநாள் மூவரும் தேவர்கள் கூடியுள்ள அவைக்கு வந்தனர். சிவபெருமானிடம் கொடுத்த வில்வத்தைக் கங்கையின் அலை அடித்துச் சென்று விட்டது. திருமாலிடம் கொடுத்த திருத்துழாயைப் பாற்கடலின் அலை கொண்டுபோய்விட்டது. நான் முகன் தன்னிடம் .ெ கா டு த் த பு ைக யி லே ைய ந | ம க ளி ட ம் கொடுத்து வைத்திருந்ததால் அது கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக இருந்தது. தேவர்கள் அம்மூவரையும் நோக்கி 'நேற்று நாங்கள் கொடுத்த பத்திரங்களைக் கொண்டுவந்தீர்களா?" என்று கேட்க, சிவபெருமானும் திருமாலும் ஒருவரையொருவர் நோக்கி ஒன்றும் கூற இயலாது விழித்தனர்; என்ன மறுமொழி கூறுவது எனத் தெரியாது மயங்கி நின்றனர். நான்முகனுக்கோ மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. தன் துணைவியிடம் .ெ கா டு த் து வைத்திருந்த புகையிலையை வாங்கித் தேவர்கள் முன் வைத்து, "மற்றவர்கள் பத்திரங்கள் போயின; என்னுடையது போகையிலை” என்று கூறிஞர். அவர் வாயிலிருந்து புகையிலையின் மரூஉவாகிய போகையிலை என்ற பெயர் தோன்றியது. நான்முகனிடமிருந்து நழுவாமல் அவருக்கு உரியதாகிவிட்டதால், அன்றுமுதல் அதற்கு பிரம்ம ப த் தி ர ம் என்ற மற்ருெரு பெயரும் வழங்கலாயிற்று. நான்முகனும் தான் கூறிய வழக்கில் வெற்றி பெற்ருர்; ஏனைய இருவரும் தத்தம் வழக்கை இழந்து விட்டனர். புகையிலை 'கச்சாப்பொருளாக இருக்கும்போதே அதன் பெருமையை அளவிட்டுக் கூறமுடியாது. அது, எல்லார்க்கும் மாலாய் இசைத்து பசந்தோங்கிப் பல்லா யிரவடிவம் பாரித்து