பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அறிவுக்கு விருந்து துட்பம் (mechanism) முதலியவற்றை நன்கு அறிந்து கொண்டு கடவுவதற்கும், ஒன்றுமே அறியாது இயக்கும் முறைகளை மட்டிலும் அறிந்துகொண்டு கடவுவதற்கும் வேறுபாடு இல்லாமல் இல்லை. இதனை மனத்தால் உணரவேண்டுமேயன்றிச் சொற்களால், தருக்கமுறை களால், புரிந்துகொள்ளச் செய்தல் முடியாது. எல்லா வித அ றி வி ய ல் உண்மைகளே அறிந்துகொண்டு ஆண்டவனின் படைப்புத் திறத்தை உணர்வதற்கும் வெறும் கற்பனையிலேயே அதனை உணர்வதற்கும் வேறுபாடு உண்டு. ஐன்ஸ்டைன் என்ற அறிவியல் மே ைத உ ண் ைம ய ர ன அறிவியலறிஞன்தான் ஆண்டவன் படைப்பின் விந்தையையும் சமயங்களின் உண்மையையும் நன் முறையில் உணர முடியும்என்று ஒரிடத்தில் கூறியிருப்பதை ஈண்டு நினைவு கொள்க. இக்காரணத்தால்தான் கவிதைபற்றிய செய்திகளும் அதனுடன் தொடர்பு கொண்ட உணர்ச்சி பற்றிய செய்திகளும் இக் கட்டுரையில் ஆராயப்பெறுகின்றன. [2] கவிதையின் உ யி ர் பே ன் ற பகுதி அ. தி ல் பொதிந்துள்ள உணர்ச்சி. உணர்ச்சியில்லாத கவிதை வெற்றெனத் தொடுக்கப் பெற்ற ஒரு சொற்கோவையே. நம்மிடம் தோன்றும் உணர்ச்சிப் பெருக்கை நாம் ஆராய்ந்து பிரித்துப்பார்க்க முனைந்தால் அஃது இயலாத செயலாக முடியும். கடலலைகளேயாவது ஒருவிதமாக எண்ணி முடிவு கட்டலாம் எனத் தோன்றும்; நம் உணர்ச்சிகளை ஒரு நாளும் எல்லைகட்டி வரையறுத்துப் பேசமுடியாது என்பது தெளிவாகப் புலகுைம். இந்த உணர்ச்சிகளைப்பற்றி மேட்ைடு உடலியலறிஞர்களும் உளவியல் நிபுணர்களும் ஆராய்ந்து அறிவியலடிப்