பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அறிவுக்கு விருந்து தந்துாரும் புனல்நாட்டின் திறம்வேண்டு; தாடொன்றும் நல்க ளுகில் ஐந்துக்வேண் டவையிலெனில் ஐந்திலம்வேண் டவை மறுத்தால் அடுபோர் வேண்டு; சிந்துளத் திலகருதத் சிந்துரத்தின் டிருப்பொசித்த செங்கண் மாலே." iநந்து-நத்தை; சிந்துராம்-ஒரு வகைப் பொடி, திலகம்பொட்டு; சித்துரம்-யானை, மருப்பு-தந்தம்) இப் பாடலிலுள்ள பல்வேறு மோனை எதுகைத் தொடைகள் பாட்டின் ஒலிநயத்திற்குத் துணைசெய்வ துடன் பாட்டின் சுவையையும் மிகுவித்துப் படிப் போரிடம் உயர்ந்த பாட்டனுபவம் தோன்றுமா r ** து தானறுமாறுسمي செய்தலே அறிக. கவிதையைக் க ரிை வி த் து ப் படிப்போருக்கு இன்பத்தை அளிப்பது அதில் பொதிந்துள்ள உணர்ச்சி. அவ் வுணர்ச்சியால் உள்ளம் பூரிக்கும் பொழுது பொங்கி வரும் இன்பமே சுவை யாகும். சுவை என்பது நாடகத்திலும் காப்பியத்திலும் வெளிப்படுவது. அஃதாவது, "காணப்படு பொருளாற் காண்போரகத்தின் வருவதோர் விகாரம்’ என்பர் இளம்பூரணர். தொல் காப்பியர் சுவைகளை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று எண்வகையாகப் பாகுபடுத்திக் கூறுவர். இவை ஒவ்வொன்றும் தத்தம் தோற்றத்திற்குக் காரணமாக அகத்தே தோன்றும் சுவைப் பொருளுக்கேற்பப் புறத்தே நான்கு வகைப்பட நிகழும் என்று அவற்றின் துட்பத்தினையும் புலப்படுத்தியுள்ளார். எடுத்துக்காட் டாக அழுகை என்னும் சுவை இழிவு, இழவு, அசைவு, வறுமை என நான்குபற்றித் தோன்றும். இழிவு என்பது 18. வில்லி பாரதம்-கிருட்டினன்து து-11