பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் கற்பனையும் 77 என்று கூறிக் களிக்கின்ருன். கவிஞனின் புலன்காட்சி (perception) நம்முடையதைவிடக் கூரியதாகவும் தெளிவாகவும் உள்ளது. கவிதை என்பது காணும் பொருள்களை வருணிப் பதில் இல்லை; அ ப் .ெ பா ரு ள் க ளே க் காணுங்கால் அவனிடம் எழும் மனநிலையில்தான் அஃது உள்ளது. அந்த மனநிலைக்கு ஒரு வடிவம் கொடுத்து அழகிய சொற்களால் ஓவியமாக அமைப்பதே கவிதையாகும். அக் கவிதையைப் படிக்கும் நம்மிடத்திலும் அதே மன நிலையை உண்டாக்கவல்லது அக் கவிதை. திருக்குற்ருல மலைக்கு நாம் எத்தனையோ முறை போயிருக்கின்ருேம்; பல இயற்கைக் காட்சிகளில் ஈடுபட்டுத் திளைத்திருக் கின் ருேம்; ஒருவகை யனுபவத்தையும் பெற்றிருக் கின்ருேம். குமரகுருபர அடிகள் பெற்ற அனுபவம் இது : சிங்கமும்வெங் களிறுமுடன் விளையாடும் ஒருபால்; சினப்புலியும் மடப்பினையும் திளைத்திடும்அங் கொருபால்; வெங்காடி மரையிளுெடும் விளையாடும் ஒருபால்; விட அாவும் மடமயிலும் விருந்தயரும் ஒருபால்' இருப்பதைவிட இருக்கவேண்டியதைக் கூறுகின் ருர் கவிஞர்; தாம் விரும்பியவற்றைத் தெரிவிக்கின்ருர், கற்பனையில் அவர் காணும் காட்சியை நாம் காணும் பொழுது எல்லையற்ற இன் பத்தில் ஈடுபடுகின்ருேம். 4. மீளுட்சியம்மை குறம்-16