பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் கற்பனையும் 85 அதல்ை நரம்புகளை மட்டிலும் தெளிவாகக் காண விழைவார்க்குப் பிறவற்றைக் காட்டாமல் உடலமைப் பின மட்டிலும் காட்டி அதனுள் எல்லா நரம்புகளும் காட்டப்பெறுகின்றன. அங்ங்னமே, எலும்பு அமைப் பினைத் தெளிவாக அறிய விரும்புவோர்க்கு ஏனைய வற்றை யெல்லாம் காட்டாமல் எலும்புகளை மட்டிலும் புலப்படுத்திப் படம் வரையப் பெறுகின்றது. தசை நார்களை மட்டிலும் அறிய விரும்புவோர்க்கு அவை மட்டிலும் தெளிவாக இருக்குமாறு படம் வரையப் பெறுகின்றது. இவற்ருல் நமக்கு யாதொரு ஐயப்பாடும் தோன்றுவதில்லை. இவற்றுள் ஒன்றை மட்டிலுமா கொண்டு உடல் இருக்கின்றது என்று நாம் ஐயப் பாட்டுடன் வினவுவதுமில்லை; ஆராய்ச்சி நடத்துவது மில்லை. இதே முறைதான் கற்பனையிலும் கையாளப் பெறுகின்றது. அதனுல்தான் க வி ைத, சுவையும் தெளிவும் பெற்றுச் சிறப்பாகத் திகழ்கின்றது. உளவியலார் கற்பனையைப் பலவாருகப் பாகுபாடு செய்து உரைப்பர். இலக்கியங்களைத் திறய்ைவோர் அவற்றை அறிவது சாலப்பயன் தரும். சி. டி. வின்செஸ்டர் என்ற ஆங்கிலத் திறய்ைவாளர் கற்பனையைப் படைப்புக் கற்பனை, இயைபுக் கற்பனை, கருத்து விளக்கக் கற்பனை என்று மூவகையாகப் பகுத்துப் பேசுவர். இவை ஒவ்வொன்றையும் எடுத்துக்காட்டுக்களால் விளக்கு வோம். வாசவதத்தையின் அழகினைக் குறித்துக் கொங்கு வேளிர் இவ்வாறு கூறுவர்: 'யாற்றற லன்ன கூந்தல்; யாற்றுச் சுழியெனக் கிடந்த குழிநவில் கொப்பூழ்,