பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வார்ப்புரு:X—larger


58. சீர்திருத்தம்

இன்றைக்கு 65 ஆண்டுகட்கு முன்பு, 1919ம் ஆண்டு, அமெரிக்காவில் ஒரு பெரிய கோடீசுவரர் இருந்தார், அவருக்குத் தன்னிடம் எத்தனை கோடி டாலர்கள் இருக்கிறது என்பதே தெரியாது. அவ்வளவு பெரிய செல்வந்தர்.

அவருடைய ஒரே மகன் யுத்தத்தில் இறந்ததைத் தொடர்ந்து, சகோதர பாசத்தால் மகளும், புத்திர சோகத்தால் மனைவியும், அவரை விட்டு மறைந்தனர்.

குடும்பத்தினர் அனைவரையும் இழந்த அவர், தன்னையும் ஒருநாள் சாவு தழுவ வரப்போவதை எண்ணி சிந்திக்கத் தொடங்கினார். உறவினர் என்று சொல்லவும் எவரும் இல்லை. தான் சாவதற்குள் இந்தச் சொத்துக் களை நல்ல வழியில் பயன்படுத்தச் செய்து மறைய எண்ணினார்.

இந்த எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியபோது, நண்பர்கள் பலர் கோயில் கட்டவும், மருத்துவமனை, கல்விக் கூடங்கள், அறநிலையங்கள் அமைக்கவும் அவருக்கு ஆலோசனை கூறினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/96&oldid=962721" இலிருந்து மீள்விக்கப்பட்டது