பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

115632.அறிவுடையோர் சிரித்தற் கஞ்சார்.

மார்ஷியல்

633.சிரிப்பே மனிதனை மற்றப் பிராணிகளினின்றும் வேறுபடத்திக்காட்டும் செயலாகும்.

அடிஸன்

634.மூடன் அதிகமாகச் சிரிப்பான்; வஞ்சகன் சிரிக்கவே செய்யான்.

புல்லர்

635.சான்றோர் புன்னகையைக் காணலாம். சிரிப்பைக் கேட்க முடியாது.

செஸ்டர்பீல்டு

636. நகையாடுபவன் அநேகமாக எல்லாவற்றையும் நகையாடற்குரிய விஷயமாகக் கருதுவான். ஆனால் அறிஞனோ எதையும் அவ்விதம் கருத மாட்டான்.

கதே

637.நகைக்கப்படக் கூடிய குறை எதுவுமில்லாதவன் அன்பு செய்யப்படக் கூடியவனாகான்.

ஹேர்

638.அதிகமாக நகையாதே. ரஸிகன் மிகவும் குறைவாகவே நகைப்பான்.

ஹெர்பர்ட்