பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

139774. பிறர் துன்பம் கண்டு இரங்குதல் மனித குணம்—அதை நீக்குதல் தெய்வ குணம்.

மான்

775.“ஈதல்”—இதிலேயே மனிதன் கடவுளை ஒப்பான்.

ஸிஸரோ

776.என்னிடம் உதவி பெற்றவன் அதை மறந்தால் அது அவன் குற்றம். ஆனால் நான் உதவி செய்யாவிட்டால் அது என் குற்றம்.

ஸெனீக்கா

777.ஈத்துவக்கும் இன்பத்தையே பரிபூரணமாக அனுபவிக்க முடியும். மற்ற இன்பங்களையெல்லாம் அரை குறையாகவே.

டூமாஸ்

778.எத்தனையோ இன்பங்களைத் துய்க்கலாம், ஆனால் ஈத்துவக்கும் இன்பத்தைப்போன்றது எதுவுங்கிடையாது.

கே

779.நாம் கொடுக்கும்பொழுதுதான் நம் பணம் நம்முடையதாகும்.

மாக்கன்ஜி

780.பரிபூரண மனிதருக்கும் இன்றியமையாத இரண்டு குணங்கள் அன்பும் கொடையுமே ஆகும்.

புல்வெர்