பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

அறிவுக்



805.விளக்கு ஏற்றுவது விளக்குக்கு வெளிச்சம் தருவதற்காக வன்று. அதுபோல் ஆண்டவன் அருளிய நம் நற்குணங்கள் பிறர்க்கு நன்மை தராவிடில் இருந்தும் இல்லாதனபோல் தான்.

ஷேக்ஸ்பியர்

806. பிறர் பாரத்தைத் தாங்கிக் கைகொடுத்தால் நம் பாரம் கனம் குறையும்.

ஆவ்பரி

807.உபகாரமானது செய்த சேவையில் அடங்காது. செய்தவனுடைய நோக்கத்திலேயே அடங்கும்.

ஸெனீக்கா

808.உண்மையாளர்க்கு உதவியின் மதிப்பு உதவுவார் மதிப்பளவே யாகும்.

டெனிஸன்

809.பிறர் செய்த உபகாரம் அதிகமாக உன் கையில் தங்கவிடாமல் பார்த்துக்கொள், ஜாக்கிரதை.

எமர்ஸன்

810.நம் விளக்கை ஏற்ற பிறன் விளக்குக்குச் செல்லுதல் நலமே. ஆனால் நம் விளக்கை ஏற்றாமல் அவன் விளக்கருகே அதிக நேரம் தாமதித்தல் நலமேயன்று.

ப்ளுட்டார்க்

811.பெறுபவன் மதிக்குமளவே பெறுகின்ற உதவியின் மதிப்பாகும்.

பப்ளியஸ் ஸைரஸ்