பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

145812. கெட்டவன் கொடை நன்மை கொடுப்பதில்லை.

யுரிப்பிடீஸ்

813.பிறர் உன் விளக்கை உபயோகித்துக் கொள்ளட்டும். ஆனால் உன் விளக்கு சிறிதேயாயினும் அதிலுள்ள நெய்யைக் கொடுத்துவிட மட்டும் சம்மதிக்காதே.

மேட்டர்லிங்க்

814.அதிகமாக நேசிப்பவன் அதிகமாக உதவி செய்பவன்.

அக்கம்பிஸ்


50. இரத்தல்


815. இரப்போரைக் குதிரைமேல் ஏற்றி வைத்தால் குதிரை இறக்கும்வரை சவாரி செய்து கொண்டிருப்பர்.

ஷேக்ஸ்பியர்

816.உண்மையான இரவலனே உண்மையான அரசனாவான்.

லெஸ்லிங்

817.இரவலனாய் வாழ்பவன் இறைவனாயிருக்க விரும்புகின்றான். இறைவனாய் வாழ்ந்தவன் இரவலனாய் வாழவில்லை என்று வருந்துகின்றான்.

ஹால்