பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

159898.நாம் செய்ய வேண்டியதைக் காட்டுபவர் தீர்க்கதரிசி; நாம் நேசிக்க வேண்டியதைக் காட்டுபவர் கவிஞர்.

கார்லைல்

899.அனைவரிடத்திலும் கவிதையம்சம் உண்டு. முற்றிலும் கவிதையம்சமாக உள்ளவர் யாருமிலர். கவிதையைச் சரியாக வாசிக்கக் கூடியவர் அனைவரும் கவிஞரே.

கார்லைல்

900.கவிதை துக்கத்தின் சகோதரி. துக்கம் அறிந்தவன் கவிஞன். ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் ஒருகவி, ஒவ்வொரு இதயமும் ஒருகீதம்.

ஆண்ட்ரே

901.கவிதையின் லட்சியம் நன்றாய் யோசிக்கச் செய்வதன்று, உண்மையை உணரச் செய்வதேயாகும்.

ராபர்ட்ஸன்

902.உன்னிடம் கொஞ்சமாவது கவிதையில்லாவிட்டால் நீ எங்கும் கவிதையைக் காணமாட்டாய்.

ஜூபெர்ட்

903.கவிதை என்பது கருத்தின் இசையைப் பாஷையின் இசையில் தெரிவிப்பதாகும்.

சாட்பீல்ட்

904.கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே யாவான்.

இப்ஸன்