பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அறிவுக்116. அதிகமான ஜனங்கள் நம்புகிறார்களா? அப்படியானால் அவ்வளவுக் கவ்வளவு அதிக ஜாக்கிரதையாக அந்த விஷயத்தை ஆராய்தல் அவசியம்.

டால்ஸ்டாய்

117. உயிரளிக்கும் உண்மையினின்று நம்மைப் பிறழச் செய்யும் சகப் பொய்கள் நாசமாய் ஒழிக!

டெனிஸன்

118. ஏதேனும் ஓர் உண்மையைத் தள்ளி மிதித்து விட்டால், அது சமாதான மொழியாயிருப்பதற்குப் பதிலாகச் சமர் தொடுக்கும் வாளாய் மாறிவிடும்.

ஹென்றி ஜார்ஜ்

119. 'சடங்கு' -அதன் அடியார் குழாங்கள் உபயோகமற்ற நிழல்களுக்காக உயிர் துறக்க எப்பொழுதும் தயார். 'உண்மை' - அழியா விஷயங்களின் அன்னை. ஆயினும் அதற்கு ஒரு நண்பனைக் காண்பது அரிது.

கூப்பர்

120. உண்மையாக இருக்கத் துணிக. ஒன்றிற்கும் பொய் வேண்டியதில்லை. பொய்யை விரும்பும் குற்றம் அதனாலேயே இரண்டு குற்றமாய்விடும்.

ஹெர்பர்ட்

121. சுருதிக்காக அறிவை அகற்றுபவன் இரண்டின் ஒளியையும் அவிப்பவனாவான். அவன் செயல், கண்ணுக்கு எட்டா நட்சத்திரத்தைத் தூர திருஷ்டிக் கண்ணாடி வழியாய்த் தெளிவாய்ப் பார்ப்பதற்கு என்று கண்களை அவித்துக் கொண்டது போலாகும்.

லாக்

122. தவறு ஒன்றுதான் சர்க்கார் தயவை வேண்டும். உண்மைக்கு அது வேண்டியதில்லை.

தாமஸ் ஜெவ்வர்ஸன்