பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அறிவுக்


ஸதே

130. முதலில் பொய்யாய்த் தோன்றுவது எல்லாம் பொய்யாகி விடா.

ஸதே

131.பிழை செய்தால் பிறர் கண்டுகொள்ள முடியும். ஆனால் பொய்கூறினால் பிறர் கண்டுகொள்ள முடியாது.

கதே

132.பலவீனத்தின் அளவே பொய்மையின் அளவும். பலம் நேரிய வழியில் செல்லும் குழிகள் அல்லது துளைகள் உள்ள ஒவ்வொரு பீரங்கிக் குண்டும் கோணியே செல்லும், பலமற்றவர் பொய் சொல்லியே தீரவேண்டும்.

ரிக்டர்

133.முழுப் பொய்யோடு முழு வல்லமையுடன் போர்புரிய முடியும்; ஆனால் மெய் கலந்த பொய்யோடு போர்புரிதல் கஷ்டமான காரியம்.

டெனிஸ்ன்

134.மெய் கலந்த தவறுகளே அபாயகரமானவை. மெய்க் கலப்பாலேயே அவைகள் எங்கும் பரவச் சாத்தியமாகின்றது.

ஸிட்னி ஸ்மித்

135.சுத்தப் பொய்யால் ஒரு நாளும் தொந்தரவு உண்டாவதில்லை.

ஸிட்னி ஸ்மித்