பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

39




187.வாழ்வில் கற்க வேண்டிய கடின பாடங்களில் ஒன்றுண்டு. அதைப் பெரும்பாலோர் கற்பதில்லை. இங்கேயே நம்மைக் சூழ்ந்தே சுவர்க்கம் உளது என்பதே அந்தப் பாடம்.

ஜான் பரோஸ்

188. அறநெறி பற்றிப் பேசுவதன்று, அறநெறியில் நடப்பதுவே கவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும்.

எம். ஹென்றி

189.உயிரோடு இருக்கும்பொழுது தன் இதயத்தை சுவர்க்கத்துக்கு அனுப்பாதவன், உயிர் போனபின் சுவர்க்கத்துக்குப் போக முடியாது.

பிஷப் வில்ஸன்

190.எப்பொழுதும் நியாயம் வழங்கும் வள்ளல்கள், எப்பொழுதும் வண்மை உடைய நீதிமான்கள், இவர்கள் முன்கூட்டி அறிவியாமலே கடவுள் சன்னிதானத்துக்குப் போகலாம்.

பழமொழி

191.சுவர்க்கத்தை நன்கு போற்ற வேண்டுமானால் பதினைந்து நிமிஷமாவது நரக அனுபவம் தேவை.

கார்ல்டன்


9. நரகம்


192. நரகத்திற்குச் செல்ல மனிதர் எவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கின்றனர்! - அதில் நேர்பாதி போதுமே சுவர்க்கத்திற்குச் செல்ல - அதை நல்வழியில் எடுத்துக் கொள்ளும் துணிவுமட்டுமே தேவை.

பென் ஜான்ஸன்