பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

57


ஆர்னால்ட் பென்னெட்

290.பாத்திரம் நிறைந்திருப்பின் வெளியே ஊற்றாமல் உள்ளே ஊற்ற முடியாது.

அர்னால்ட் பென்னெட்

291.அதைரியப்படாதே. ஒன்று தான் அச்சம் அளிப்பது: பாபமே அது.

ஸெயிண்ட் கிறிஸாஸ்டம்

392.தீமை செய்வதினும் தீமை பெறுதலே நலம்.

ஸிஸரோ


293.ரோஜா முள்ளின்றி மலர்வதில்லை, உண்மையே. ஆனால் மலர் இறக்க முள் இருக்கலாகாதன்றோ?

ரிக்டர்


294.அநேக சந்தர்ப்பங்களில் நாம் தீமை யென்று கூறுவது, தவறியோ அல்லது மிதமிஞ்சியோ ஏற்பட்ட நன்மையாகும். மனோதைரியம் மிதமிஞ்சினால் மடமையாகும். பட்சம் மிதமிஞ்சினால் பலவீனமாகும். சிக்கனம் மிதமிஞ்சினால் லோபமாகும்.

ஆவ்பரி


295.மனிதர் தற்சமய நிலைமையில் காணும் தீமைகளுக்காக வருந்தும்பொழுது, வேண்டுமென்று விரும்பும் நிலையில் ஏற்படக்கூடிய தீமைகளைப்பற்றிச் சிறிதும் சிந்திப்பதில்லை.

பிராங்க்லின்